OnePlus 10T: இந்த முறை விலையில் கவனம்; ஒன்பிளஸ் 10டி 5ஜி போன் அறிமுகம்!

Oneplus 10T Release: ஒன்பிளஸ் தனது புதிய ஒன்பிளஸ் ஏஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் இந்தியா உள்பட பிற சந்தைகளில் ஒன்பிளஸ் 10டி 5ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

திறன்வாய்ந்த சிப்செட், அதிவிரைவான சார்ஜிங் வசதி, 150W சார்ஜிங் அடாப்டர் என அனைத்து அம்சங்களும் அடங்கிய பவர் பேக்டு ஃபோனாக களம் கண்டிருக்கும் புதிய ஒன்பிளஸ் 10டி 5ஜி, விலையிலும் சற்று கரிசனம் காட்டியுள்ளது.

நிறுவனம் எப்போதும் பிராண்டின் பெயருக்காக விலையை சற்று உயர்வாகப் பட்டியலிடும். எனினும், இம்முறை மதிப்புமிக்க விலையில் ஸ்மார்ட்போனை நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதில் 16ஜிபி வரை ரேம் ஆதரவு இருக்கும் எனத் தெரிவித்திருக்கும் ஒன்பிளஸ், இந்த மேம்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Legend iQOO 9T 5G: ஐக்யூ 9டி 5ஜி அறிமுகம்; ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள்… நியாயமான விலையில்!

ஒன்பிளஸ் 10டி ப்ரோ விலை (Oneplus 10T Price in India)

OnePlus 10T 5G ஜேட் கிரீன், மூன் ஸ்டோன் ஆகிய இரண்டு நிறத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த போன் அமேசான் இந்தியா தளத்தின் வாயிலாக ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.

இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.49,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.54,999ஆக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த போனுக்கு கூடுதல் வங்கி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்தி:
Jio Recharge: தினசரி 2ஜிபி டேட்டா; ஓடிடி நன்மைகள் – ஜியோவின் சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனுக்கு நேரடியாக ரூ.5,000 தள்ளுபடி பெற முடியும். கூடுதலாக கட்டணமற்ற சுலப மாதத் தவணை திட்டமும் கிடைக்கும். இந்த சலுகையைப் பயன்படுத்தி போனை வாங்கினால் அடிப்படை மாடலை வெறும் ரூ.44,999-க்கு பயனர்கள் வாங்க முடியும்.

ஒன்பிளஸ் 10டி 5ஜி அம்சங்கள் (OnePlus 10T 5G Specifications)
பெயர்ஒன்பிளஸ் 10டி 5ஜிகட்டமைப்புமெட்டல்இயங்குதளம்ஆண்ட்ராய்டு 12 (MIUI 13)புராசஸர்குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1திரை6.7″ அங்குல முழுஅளவு எச்டி+ ஃப்ளூயிட் அமோலெட் பேனல் / பஞ்ச் ஹோல் / 120Hz ரெப்ரெஷ் ரேட் / கார்னிங் கொரில்லா கிளாஸ் / எச்டிஆர்10+ / 394ppiபின்புற கேமரா50 மெகாபிக்சல் OIS (f/1.8, சோனி IMX766)+ 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்முன்புற கேமரா16 மெகாபிக்சல் (f/2.4)ஸ்லாட்இரண்டு 5ஜி சிம்ரேம்8ஜிபி, 12ஜிபி, 16ஜிபி (LPDDR5)சேமிப்பகம்128ஜிபி, 256ஜிபி (UFS3.1)ஆதரவுவைஃபை 6, ப்ளூடூத் 5.3, டைப்-சி, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், டால்பி அட்மாஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், எக்ஸ் ஆக்சிஸ் லீனியார் மோட்டார்சென்சார்அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, கைரேகை, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப், NFCஇடங்காட்டிஜிபிஎஸ், BEIDOU, GLONASS, GALILEO, QZSSபேட்டரி4,800mAh (இரட்டை செல்) / 150W சூப்பர்வூக்நிறங்கள்மூன்ஸ்டோன் பிளாக், ஜேட் கிரீன்விலை8ஜிபி + 128ஜிபி – ரூ.49,999 | 12ஜிபி + 256ஜிபி – ரூ.54,999எடை203.5 கிராம்அளவு16.3*7.54*0.88 சென்டிமீட்டர்வெளியீடுஆகஸ்ட் 2022

ஒன்பிளஸ் 10டி 5ஜி போனானது 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கும் 6.7 இன்ச் முழு எச்டி+ LTPO 2.0 அமோலெட் டிஸ்ப்ளே, 360Hz டச் சேம்பிளிங் ரேட், HDR10+ ஆதரவுடன் இருக்கும். இதன் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்படும். ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் இதில் கொடுக்கப்படலாம்.

Jio 5G: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி; மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் கிடைக்குமாம்!

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான கலர் ஓஎஸ் ஸ்கின் இதில் நிறுவப்பட்டிருக்கும். போனின் கேமராவைப் பொருத்தவரை பின்புறம் OIS ஆதரவுடன் வரும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை கொண்டிருக்கும்.

முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படும். ஒன்பிளஸ் 10டி 5ஜி போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி வழங்கப்படும். அதனை திறனூட்ட 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் பயனர்களுக்குக் கிடைக்கும். அலெர்ட் ஸ்லைடரை நீக்கியுள்ள நிறுவனம், 150W சார்ஜிங் அடாப்டரை போனுடன் வழங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.