இங்கிலாந்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்


பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் கடத்தப்பட்டதாக தெரிவித்து காலி உனவடுன பிரதேசத்தில் தந்தையொருவர் விடுத்த வேண்டுகோள் குறித்து அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி தொடர்பில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் பத்து வருடங்களாக தீவிரவாத கும்பலால் சிறைபிடிக்கப்பட்ட எனது மகளை விடுதலை செய்” என்ற வாசகம் அடங்கிய வான் ஒன்று தென்னிலங்கையில் சுற்றித் திரிகிறது.

காலியில் வாழும் சேனக சொய்சாஎன்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

குறித்த வாகனத்தில் இருக்கும் புகைப்படத்தில் உள்ள யுவதியின் தந்தையான சேனக சொய்சா இந்த வாகனத்தை ஓட்டிச் செல்வதுடன், தனது மகளைத் தேடித் தருமாறு தினந்தோறும் பரவலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இங்கிலாந்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல் | The Sri Lankan Girl Who Kidnapped In England

2012ம் ஆண்டில், அவரது பத்து வயது மகள் இங்கிலாந்தில் தேசிய குற்றவியல் முகவரம் என்ற பயங்கரவாதக் குழுவால் கடத்தப்பட்டதாகவும், தனது மகளை தன்னிடம் திருப்பித் தர ஏற்பாடு செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் இங்கிலாந்தில் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று இந்த பெண்ணை தொடர்புகொண்டு கேட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள அவர் தான் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், இங்கிலாந்தில் தனது தாயுடன் நேரத்தை செலவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.       



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.