மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை விற்கவுள்ள இந்தியா..!

மலேசிய விமானப் படைக்கு 18 இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை இந்தியா விற்பனை செய்யவுள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், கடந்த ஆண்டு அரசுக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 83 தேஜஸ் போர் விமானங்களை 2023-ம் ஆண்டு முதல் விநியோகம் செய்வதற்கான 6 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை அரசு வழங்கியது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மலேசிய விமானப்படையிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை ஏற்று ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்ட 18 தேஜஸ் விமானங்களை விற்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் முன்வந்தது.

அதேபோல், தேஜஸ் போர் விமானத்தை வாங்க அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்பட 6 நாடுகள் விருப்பம் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.