ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு: பங்குச்சந்தையில் என்ன தாக்கம்?

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு, ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதேபோல் SDF விகிதம் 5.15 சதவீதமாகவும், MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி மாற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்பட்டதா? என்னென்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை பார்ப்போம்.

கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் 0.5% வட்டி விகிதம் அதிகரிப்பு..!

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

ரெப்போ வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன் இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை உயர்ந்திருந்த நிலையில் வட்டி விகித மாற்றம் குறித்த அறிவிப்புக்கு பின் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தற்போதும் கிட்டத்தட்ட அதே நிலையில் தான் பங்குச்சந்தை உள்ளது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டியிலும் பெரிய மாற்றம் இல்லை. மாலையில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை அடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 79.0575 என வர்த்தமாகி வருகிறது.

எஸ்பிஐ-ஐசிஐசிஐ
 

எஸ்பிஐ-ஐசிஐசிஐ

ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பால் இன்றைய பங்குச்சந்தையில் ஐசிஐசிஐ பங்குகளின் விலை சுமார் இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதேபோல் எஸ்பிஐ பங்குகள் 1.48 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கியின் கவர்னர்

ரிசர்வ் வங்கியின் கவர்னர்

ரெப்போ வட்டி விகித மாற்ற அறிவிப்புக்கு பின் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘உலக பொருளாதாரத்தின் தொடர்ச்சியான அதிர்வுகள், இந்திய பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன என்று தெரிவித்தார். இருப்பினும், உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உள்நாட்டு பொருளாதாரம்

உள்நாட்டு பொருளாதாரம்

டெர்ம் டெபாசிட் விகிதங்களின் உயர்வு நிதித் துறைக்கான பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறிய சக்திகாந்த தாஸ், சமையல் எண்ணெய் விலை மேலும் குறையும் என்றும் தெரிவித்தார். மேலும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்தார்.

மூன்று முறை உயர்வு

மூன்று முறை உயர்வு

மத்திய வங்கி வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதம் என்று கூறப்படும் ரெப்போ விகிதத்தை நடப்பு நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி மே மாதம் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகளும், ஜூன் மாதத்தில் 50 அடிப்படை புள்ளிகளும் உயர்த்திய நிலையில் தற்போது மேலும் 50 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI hikes repo rate by 50bps; Sensex surges, SBI up 1 percent

RBI hikes repo rate by 50bps; Sensex surges, SBI up 1 percent | ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்வு: பங்குச்சந்தையில் என்ன தாக்கம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.