'தனி பேரிடர் மேலாண்மை மையம் வேண்டும்' – அமித் ஷாவிடம் உத்தராகண்ட் முதல்வர் கோரிக்கை

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை நேரில் சந்தித்தார். அப்போது உள்துறை அமைச்சருடன் கலந்து பேசிய அவர் உத்தரகண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேரிடர் பணிகள் குறித்தும் தெரிவித்தார்.
image
மேலும் ஒவ்வொரு ஆண்டும் பேரிடர் காலங்களில் உத்தராகாண்ட் மாநிலம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்து வருகிறது. அப்போதெல்லாம் ஏற்படும் பேரிடர்களை பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் இல்லாமல் முன்னதாக தடுக்கவும், பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க மாநில அரசாங்கம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரி செய்யும் பொருட்டு பேரிடர் மேலாண்மை பணிக்கான தனி நிறுவனத்தை (institute aimed at disaster management) உத்தராகண்ட் மாநிலத்தில் உருவாக்கித் தருமாறு மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாக உத்தராகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.