தேஜஸ்வினி கவுடாவுக்கு டும் டும்

சின்னத்திரை நடிகையான தேஜஸ்வினி கவுடா தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' என்ற தொடரின் மூலம் அறிமுகமான தேஜஸ்வினி, தற்போது ஜீ தமிழில் 'வித்யா நம்பர் 1', விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்' ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மிகக்குறைந்த நாட்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள தேஜஸ்வினி பல இளைஞர்களின் காதல் தேவதையாகவும் மாறிவிட்டார்.

இந்நிலையில், அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் பிரபலமான அமர்தீப்புக்கும் தேஜஸ்வினிக்கும் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனையடுத்து மூன்று மொழி சின்னத்திரை ரசிகர்களும் அமர்தீப் – தேஜஸ்வினி ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.