புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!


உக்ரைன் போர் புதிய கட்டத்திற்கு நுழைவதாக பிரித்தானிய இராணுவ உளவுத்துறை தலைவர்கள் எச்சரிக்கை தகவல் அளித்துள்ளனர்.

உக்ரைன் ராணுவ படைகளின் எதிர் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்குப் பகுதியில் குவிந்து உள்ளனர் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை எச்சரித்துள்ளனர்.

ரஷ்ய இராணுவ டாங்கிகள், டிரக்குகள் மற்றும் பீரங்கிகள் கொண்ட நீண்ட கான்வாய்கள் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து தென்மேற்கு நோக்கி நகர்வதாக பிரித்தானிய உளவுத் துறை தனது ட்விட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுமார் 350 கிமீ முன் வரிசைக்கு தென்மேற்கே ஐபோரிஜியாவுக்கு அருகில் இருந்து கெர்சன் வரை கடுமையான சண்டை நீண்டு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் புதிய ஒப்பந்தம்…ஹங்கேரி, போலந்து எதிர்ப்பு!

800 முதல் 1000 துருப்புக்களைக் கொண்ட பட்டாலியன் தந்திரோபாயக் குழுக்கள் கிரிமியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன, இவை கெர்சனில் உள்ள ரஷ்ய துருப்புகளை ஆதரிக்கும் எனவும் பிரித்தானிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

புதிய கட்டத்திற்கு நுழையும் உக்ரைன் போர்: பிரித்தானிய உளவுத்துறை அதிர்ச்சி தகவல்! | Ukraine War Set Enter New Phase Uk Defence Warns Alexander Nemenov/Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.