பொது நலவாய விளையாட்டுப்போட்டி: நெத்மிபொருதொடகேவுக்கு வெண்கலப்பதக்கம்

இங்கிலாந்தின்பர்மிங்காமில்நடைபெற்ற 2022 பொது நலவாய விளையாட்டுப்போட்டியில் (women’s 57kg freestyle  wrestling event)பெண்களுக்கான 57கிலோகிராம் எடைப்பிரிவின்மல்யுத்தப்போட்டியில் இலங்கை வீராங்கனை நெத்மிபொருதொடகே வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொள்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வீராங்கனை இரீனி சைமெண்டிஸை Irene Symeonidis 18 வயதான நெத்மி பொருதொடகேதோற்கடித்து வெற்றிபெற்றார்.

2022 பொது நலவாய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இலங்கை வென்ற முதலாவது மல்யுத்தப் பதக்கமும் இதுவாகும்.

2022 பொதுநலவாய விளையாட்டு  போட்டி  எட்டாவது நாள் நிறைவில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தமாக 4 பதக்கங்களை பெற்றுள்ளது.

காலிறுதிப்போட்டியில் கெமரூன் வீராங்கனை ஜோசப் எமிலின்னேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய நெத்மி பொருதொடகே, அரையிறுதியில் இந்திய வீராங்கனை அன்சு மலிக்கை எதிர்கொண்டார்.

அரையிறுதிப்போட்டியில் 0-10 என தோல்வியடைந்த நெத்மி பொருதொடகே, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை இரீனி சைமெண்டிஸை 10-0 என வீழ்த்தி  வெண்கலப்பதக்கத்தை வெற்றிக்கொண்டார்.

இலங்கை வீரர்கள், 2022 பொதுநலவாய விளையாட்டுப்போட்டி பதக்க பட்டியலில் 25வது இடத்தில் இடம்பெற்றுள்ளனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.