சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஆர்வமுள்ளவரா? லட்சக்கணக்கில் சம்பாதிக்க வழி இதோ…!

தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் வருமானம் பெறுவதற்கு ஏராளமான புதுப்புது வழிகள் இருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமூக வலைதளங்களை பொழுதுபோக்கிற்காக மட்டும் ஒரு காலத்தில் பயன்படுத்திய நிலையில் தற்போது சமூக வலைதளங்கள் மூலம் கைநிறைய சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஒரு ரூபாய் முதலீடு இல்லாமல் லட்ச லட்சமாக சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வோடபோன் ஐடியா: 7300 கோடி ரூபாய் நஷ்டம்.. எப்ப லாபம் கிடைக்கும்..?!

 சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் தான் இருக்கின்றனர் என்பதும் சமூக வலைதளங்கள் அந்த அளவுக்கு உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வெறும் பொழுதுபோக்காக மட்டும் சமூக வலைத்தளங்களை பார்க்காமல் அந்த சமூகவலைதளங்கள் மூலம் சுய தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம்.

முதலீடு தேவையில்லை

முதலீடு தேவையில்லை

எந்த ஒரு தொழில் செய்வதாக இருந்தாலும் குறைந்தபட்ச முதலீடு தேவைப்படும். ஆனால் சமூக வலைதளங்களில் சம்பாதிப்பதற்கு ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை என்பதும் ஆர்வத்துடனும் சுவாரஸ்யத்துடன் பணிபுரிந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 அரசியல்வாதிகள் - திரையுலகினர்
 

அரசியல்வாதிகள் – திரையுலகினர்

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துக்களை விளம்பரப்படுத்தி வருகின்றனர் என்பதும், அது மிகப்பெரிய அளவில் மக்களை சென்று சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 சமூக வலைத்தள வேலை

சமூக வலைத்தள வேலை

இந்த நிலையில் சமூக வலைதளங்கள் கணக்கு வைத்திருக்கும் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பெரும்பாலும் அவர்களே நிர்வகிப்பது இல்லை. அதற்கென சிலரை நியமனம் செய்கின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன்சிங் விளையாடும் போது அவர் தனது டுவிட்டரில் தமிழில் டைப் செய்தார். அவருக்கு தமிழ் தெரியாது, ஆனால் தமிழ் தெரிந்த ஒருவரை வேலைக்கு அமர்த்தி அவர் இதனை செய்து வந்தார்.

பெரும் பயன்

பெரும் பயன்

அதேபோல் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது சமுக வலைத்தள கணக்கை நிர்வகிக்க திறமையான நபர்களை வேலைக்கு வைத்து கொள்கின்றனர். தங்கள் அரசியல் கொள்கைகள் மற்றும் தாங்கள் பணிபுரியும் திரைப்படம் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால் பெரும் பயன் பெறுகின்றனர்.

ஃபாலோயர்கள்

ஃபாலோயர்கள்

எனவே சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் ஆர்வம் இருப்பவர்கள் பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளின் நிர்வாகியாக பணிபுரியலாம். நாம் யாருக்கு பணிபுரிகின்றோமோ, அவர்கள் பற்றிய தகவல்களை சுவாரஸ்யமாக பதிவு செய்து அந்த கணக்கை பிரபலப்படுத்தலாம். இதனால் அந்த கணக்கிற்கு ஃபாலோயர்கள் அதிகமாவதுடன் நாம் சொல்லும் கருத்து லட்சக்கணக்காவர்களிடம் போய் சேரும்.

போட்டோஷாப்

போட்டோஷாப்

அதிக நபர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம். குறிப்பாக போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டிங் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது.

சம்பளம்

சம்பளம்

நீங்கள் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் திறமைக்கு ஏற்ப உங்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்பதும் உங்களுடைய புத்திசாலித்தனமான பதிவுகளால் அந்த சமூக வலைத்தளத்தில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் உங்களுக்கு சம்பளமும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

தொழில்

தொழில்

அதுமட்டுமின்றி ஒரு பிரபலத்திற்கு சரியாக பணிபுரிந்தால், அடுத்தடுத்து பல பிரபலங்களின் சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாய்ப்புகள் கிடைத்தால் உங்களுக்கு கீழே நீங்கள் சில நபர்களை வேலைக்கு அமர்த்தி இதை ஒரு தொழிலாகவே பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரியேட்டிவ் சிந்தனை

கிரியேட்டிவ் சிந்தனை

தற்போது 80 சதவீத அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். திரையுலக மற்றும் அரசியல் ஆர்வம், கிரியேட்டிவ் சிந்தனையும் இருந்தால் இந்த தொழிலில் எந்தவிதமான முதலீடும் இல்லாமல் நீங்களும் லட்ச லட்சமாக பணம் சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to earn lakhs of rupees with social media network?

How to earn lakhs of rupees with social media network? | சமூக வலைத்தளங்களில் நீங்கள் ஆர்வமுள்ளவரா? லட்சக்கணக்கில் சம்பாதிக்க வழி இதோ…!

Story first published: Saturday, August 6, 2022, 13:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.