KIA Terminal 2: ரெண்டே மாசம் தான்… மெகா சர்ப்ரைஸ்க்கு ரெடியாகும் பெங்களூரு!

நாட்டின் ஐடி தலைநகராக கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு திகழ்கிறது. இங்கு பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் கால்தடம் பதித்துள்ளன. புதிய நிறுவனங்களின் வருகையால் நகர் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் காணப்படுகிறது.

இது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முன்பாக 33 மில்லியன் பயணிகளை கையாண்டிருக்கிறது. ஆனால் விமானங்கள் இயக்கப்படுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள், அதிகரிக்கும் பயணங்க் ஆகியவற்றால் சிரமங்களுக்கு ஆளானது. இதனால் இரண்டாவது டெர்மினலுக்கான தேவை அதிகரித்தது. அந்த வகையில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) டெர்மினல் 2 பகுதியை கட்டமைக்க திட்டமிடப்பட்டது.

75வது சுதந்திர தினம்: பெங்களூரு Lal Bagh-ல் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!

இதற்கான முதல்கட்டப் பணிகள் 2.55 லட்சம் சதுர மீட்டரில் 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கின. இரண்டாம் கட்டப் பணிகள் 4.41 லட்சம் சதுர மீட்டரில் நடைபெறவுள்ளன. டெர்மினல் 2 கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி பில்டிங்ஸ் மற்றும் பேக்டரிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதியானது பூந்தோட்டங்கள் அடங்கிய ஒன்றாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

நுழைவாயில், பரிசோதனை, பாதுகாப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொங்கும் தோட்டங்கள் இடம்பெறவுள்ளன. அதுமட்டுமின்றி உட்புறத்தில் மிகப்பெரிய தோட்டம், நீர்வீழ்ச்சி உள்ளிட்ட கண்ணை கவரும் அம்சங்கள் அமைகின்றன. ஷாப்பிங் ஏரியாவும் வரவுள்ளது. மேலும் மல்டி லெவல் கார் பார்க்கிங், தண்ணீரை மறுசுழற்சி செய்யும் லகூன் ஆகியவையும் அமைகின்றன.

பெங்களூரு நகருடன் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து வசதிகள், வாடகை வாகன வசதிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதி பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ்எஸ்எல்வி ராக்கெட் தோல்வி: உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா?

இரண்டாவது டெர்மினல் பயன்பாட்டிற்கு வந்தால் ஆண்டுதோறும் கூடுதலாக 25 மில்லியன் பயணிகளை கையாள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெர்மினல் 2 தொடர்பான அழகிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.