தேசிய கராத்தே சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 12வது தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றிய வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அரபாத் மொஹமட் அதீப் 8வது பிரிவில் 2 தங்கப்பதக்கங்களை வென்று மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகரும் கிரிக்கெட் துடுப்பாட்ட வீரருமான யாசீர் அரபாத் மற்றும் பாத்திமா ஆகியோரின் புதல்வருமாவார்.