கொழும்பு:சீனாவின் உளவு கப்பலான, ‘யுவான் வாங் 5′ திட்டமிட்டபடி இலங்கை துறைமுகத்துக்கு வந்து சேரவில்லை’ என, துறைமுக நிர்வாகம் தெரிவித்தது.
சீனாவின் யுவான் வாங் 5 என்ற உளவு கப்பல், ஆக., 12 – 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இது, நம் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை அடுத்து, மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, அம்பன்தோட்டா துறைமுகத்தில் கப்பலை நிறுத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது. ஆனாலும், உளவு கப்பல் இலங்கையை நோக்கி வருவதாக தகவல் வெளியானது. ‘நேற்று காலை 9:30 மணிக்கு அம்பன்தோட்டா துறைமுகம் வந்து சேரவேண்டிய கப்பல் வரவில்லை’ என, துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர். அம்பன்தோட்டா துறைமுகத்தில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அனுமதிக்காக கப்பல் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை வந்த பாக்., போர் கப்பல்!
பாகிஸ்தான் கடற்படையினருக்காக, பி.என்.எஸ்., தைமுர் என்ற போர் கப்பலை சீனா உருவாக்கி உள்ளது. அந்த கப்பல் பாக்., செல்லும் வழியில் பல்வேறு நாடுகளில் நிறுத்தப்பட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு போர் கப்பல் நேற்று வந்து சேர்ந்தது. இங்கு இலங்கை கடற்படையினருடன் போர் பயிற்சியை முடித்து விட்டு, நாளை மறுநாள் பாகிஸ்தான் புறப்படும் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement