இந்தியாவின் முக்கிய பணக்காரர் ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பு…”அவர் அடக்க முடியாதவர்” என மோடி இரங்கல்


  • இந்தியாவின் வாரன் பஃபெட்  ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு
  • ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா அடக்க முடியாதவர் என மோடி இரங்கல்

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் பங்கு முதலீட்டாளர் ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா(62) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது கல்லூரி காலத்தில் பங்குகளை வாங்க தொடங்கி RARE எண்டர்பிரைசஸ் என்ற பங்கு வர்த்தக நிறுவனத்தை நிர்வகிக்கத் தொடங்கிய இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் சூழப்பட்ட நிலையில் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய பணக்காரர் ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பு...”அவர் அடக்க முடியாதவர்” என மோடி இரங்கல் | Indian Billionaire Rakesh Jhunjhunwala Dies62REUTERS

ஆனால் அவரது இறப்பிற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா இறுதியாக புதிய விமான நிறுவனமான ஆகாசா ஏரின் பொது வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டுள்ளார், அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

சுமார் 6 பில்லியன் டாலர் நிகர மதிப்புக்கு சொந்தக்காரரான ராஜேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வங்கியாளர்கள் என அனைவரிடமும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு கொண்டுள்ளனர்.

ராஜேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மறைவிற்கு இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கூடுதல் செய்திகளுக்கு: ஜெருசலேமில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: தேடுதல் வேட்டையில் பொலிஸார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் கருத்தில், ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடக்க முடியாதவர் எனத் தெரிவித்துள்ளார்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.