தூதுவர் , உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களை, இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தனர்.

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ( Paul Wesley Stephens) மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா (Bashu Dev Mishra) ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-17

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.