இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம்- தலீபான்கள்

காபுல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக தலீபான்கள் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது, பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தனர்.

கடந்த ஓர் ஆண்டில் அங்கு மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளை மதிக்கும் பல உறுதிமொழிகளை தலீபான்கள் மீறியுள்ளதால் சர்வதேச சமூங்கங்கள் அவர்கள் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவிற்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்புவதாக தலீபான்கள் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தாகி கூறுகையில், “ஆப்கானிஸ்தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை விரும்புகிறது. ஆனால் 20 ஆண்டுகால போருக்குப் பிறகு சில நாடுகளுடனான உறவுகள் விரைவாக இயல்பு நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

பாகிஸ்தான் தனது பொருட்களை ஆசிய நாடுகளுக்கு கொண்டு செல்ல முடிந்தால் , ஆப்கானிஸ்தானும் தனது பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு செல்ல முடியும். பாகிஸ்தான் போக்குவரத்து வழிகள் வழியாக உஸ்பெகிஸ்தானுக்கு சரக்குகளை கொண்டு செல்ல உதவுவதன் மூலம் இந்தியாவிற்கு நாங்கள் முக்கிய பங்கு வகிக்க முடிந்தது.” என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.