ஒன்றரை வருஷத்துக்கு பிறகு தியேட்டரில் தனுஷ் படம்.. திருச்சிற்றம்பலம் FDFSஐ தெறிக்கவிடும் ரசிகர்கள்!

சென்னை: கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் தான் தியேட்டரில் வெளியாகி இருக்கிறது.

காலை முதலே தனுஷ் ரசிகர்கள் தியேட்டர்களில் பட்டாசு வெடித்து, பாலபிஷேகம் செய்து திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தனுஷின் திருச்சிற்றம்பலம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

கர்ணன் தான் கடைசி

கடந்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் நீண்ட நாட்கள் தியேட்டரில் ஓடவில்லை. கொரோனா பரவல் காரணமாக மீண்டும் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், வெகு விரைவிலேயே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில், கர்ணன் படத்திற்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படமாக திருச்சிற்றம்பலம் மாறி உள்ளது.

ஓடிடி ஹீரோ

ஓடிடி ஹீரோ

நடிகர் சூர்யாவை தொடர்ந்து தனுஷும் ஓடிடி ஹீரோ என நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். ஜகமே தந்திரம், அட்ரங்கி ரே, மாறன், தி கிரே மேன் என வரிசையாக தனுஷ் நடிப்பில் கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் வெளியான படங்கள் கூட ஓடிடியில் தான் வெளியாகின. இதனால் தனுஷ் ரசிகர்கள் தியேட்டர் கொண்டாட்டத்தை மிஸ் செய்திருந்தனர்.

தெறிக்கவிடும் D பிளட்ஸ்

தெறிக்கவிடும் D பிளட்ஸ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்றதுமே ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். நிச்சயம் படம் தியேட்டர் ரிலீஸ் தான் என எதிர்பார்த்ததை போலவே தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி உள்ளிட்ட தனுஷ் படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இந்த படத்தை இயக்கி உள்ளார். தியேட்டரை காலை முதலே D பிளட்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஹிட் அடிக்குமா

ஹிட் அடிக்குமா

ஓடிடியில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் மாறன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் சொதப்பிய நிலையில், தியேட்டரில் இன்று வெளியாகி உள்ள தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஹிட் அடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஃபேமிலி என்டர்டெயினர் படமாக வெளியாகி உள்ள இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

அனிருத் மியூசிக்

அனிருத் மியூசிக்

ஒன்றரை வருடம் கழித்து தனுஷ் படம் தியேட்டருக்கு வருவது ஒரு சந்தோஷம் என்றால், பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்திருப்பது ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. ஏற்கனவே தாய்க் கிழவி, மேகம் கருக்காதா என ஆல்பம் ஹிட் அடித்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கும் அனிருத் பக்க பலமாக இருப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.