குடிபோதையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறு: மயானத்தில் ஒருவர் அடித்துக் கொலை

ராஜபாளையம் அருகே சடலத்தை அடக்கம் செய்ய மயானம் வரை உடன் சென்றவர் மயானத்திலேயே சடலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சரவணகுமார் மற்றும் சுபலட்சுமி என்ற பள்ளியில் பயிலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காளவாசல் பகுதியில் சரவணகுமாரின் உறவினர் ராமசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். துக்கம் விசாரிப்பதற்காக சென்ற சரவண குமாருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் துக்க வீட்டில் வைத்து குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராமசாமியின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக மயானம் வரை சரவணகுமாரும் உறவினர்களுடன் உடன் சென்றுள்ளார். மயானத்தில் வைத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் ஏற்பட்ட தகராறில் சரவணகுமாரை, கம்பு மற்றும் கட்டைகளால் தாக்கியுள்ளனர்.
இதில் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சரவணகுமார் மயானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கீழராஜகுல ராமன் காவல் துறையினர் சரவணகுமார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சடலத்தை அடக்கம் செய்ய உடன் சென்றவர் சடலமான சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.