50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்… தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்


  • தைவானை சுற்றி 50க்கும் அதிகமான சீன போர் விமானங்கள் ரோந்து.

    ​​

  • நாங்கள் ஏற்கனவே நன்கு தயாராக இருந்தோம், தைவான் பாதுகாப்பு அதிகாரி சென் டெ-ஹுவான் தகவல்.

தைவானை  50க்கும் அதிகமான சீன இராணுவ போர் விமானங்கள் சுற்றி வளைத்து பறந்ததாக வியாழன்கிழமை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா தைவானை தங்களது நாட்டின் ஒற்றை பகுதி என்றும், இரு பிராந்தியங்களையும் ஒன்றிணைக்க இராணுவ பலத்தை பயன்படுத்துவோம் என சீனா தெரிவித்து வருகிறது.

இந்த சமயத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் விஜயம், அதைத் தொடர்ந்து அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் தைவான் விஜயம் போன்றவை தைவான் ஜலசந்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம் | 50 Chinese Aircraft Detected Near Taiwan IslandAssociated Press

மேலும் தைவானை சுற்றியுள்ள பகுதியில் கடல் மற்றும் வான் பகுதியில் சீனாவின் போர் பயிற்சியையும் தூண்டியது.

இந்தநிலையில் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்த தகவலில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனாவின் 6 PLAN கப்பல்கள் மற்றும் 51 PLA விமானங்கள் வியாழன்கிழமை கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம் | 50 Chinese Aircraft Detected Near Taiwan Island

மேலும் இவற்றை தைவான் பாதுகாப்பு படை கண்காணித்து, தங்களது கடற்படை கப்பல்கள் மற்றும் நில அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகளில் உள்ள விமானங்கள் மூலம் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்…இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

தைவான் பாதுகாப்பு அதிகாரி சென் டெ-ஹுவான் தெரிவித்த கருத்தில், எங்கள் வழக்கமான பயிற்சி நாள் முழுவதும், 24 மணி நேர ஏவுகணை நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதால், அந்த நேரத்தில் நாங்கள் சிறிதும் பதட்டப்படவில்லை, சீன ராணுவம் செயல்பட்டபோது, ​​நாங்கள் ஏற்கனவே நன்கு தயாராக இருந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.     Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.