கோவை: NOC சமர்ப்பிக்காத விரக்தியில் பயிற்சி மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பிரவீன் அன்னதடா (33). இவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வந்தார். இந்நிலையில், தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர,; கடந்த ஓராண்டு காலமாக Tamil Nadu MGR University Medical Counsel Registration செய்ய ஜாம்ஜெட்பூரில் உள்ள தனது கல்லூரியில் NOC வாங்கி சமர்ப்பிக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து NOC வாங்கி சமர்ப்பிக்காவிட்டால் தேர்வு எழுத முடியாது என்று தனது தந்தையிடம் செல்போன் மூலம் புலம்பியுள்ளார். அவரது தந்தையும் டெல்லி சென்று NOC வாங்கிவந்து சமர்ப்பித்துவிடலாம் என்று ஆறுதல் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 6 ஆம் தேதி முதல் பிரவீன் பணிக்கும், கல்லூரிக்கும் வரவில்லை என தெரிகிறது.
image
இந்த நிலையில் அவரது பெற்றோரும் பிரவீனை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கோவைக்கு வந்து பிரவீன் தங்கியிருந்த விடுதியில் பார்த்தபோது பிரவீனின் வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
அவர் கட்டிலுக்கு அடியில் பீர் பாட்டில்களும், பூச்சிக் கொல்லி மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இந்த நிலையில் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.