பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் ஷீலா : ரசிகர்களே கடுப்பான மொமண்ட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மினி 'ஆனந்தம்' படம் போல பல குடும்ப ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதில், கதாநாயகர்களின் அம்மாவாக லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த லெட்சுமி கதாபாத்திரம் இறப்பது போல் காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், உண்மையான இறுதிச்சடங்கு நடப்பது போலவே ஷூட் செய்யப்பட்டு சரவண விக்ரமுக்கு உண்மையாகவே முட்டையடிக்கப்பட்டது. அவரும் நடிப்பில் தூக்கலாக பெர்மான்ஸ் செய்ய அந்த எபிசோடு சூப்பர் ஹிட்டாகி டிஆர்பியிலும் எகிறியது. ஆனால், கதைப்படி லெஷ்மி கதாபாத்திரம் இறந்துவிட்டாலும் நடிகை ஷீலா இன்னும் சீரியலை விட்டு முழுமையாக விலகவில்லை. அடிக்கடி ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், முதன்மை நாயகி சுஜிதாவுடன், ஷீலா நிற்பது போன்ற புதிய புகைப்படம் தற்போது வைரலாகி ஷீலா ரீ-என்ட்ரி என்கிற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. குடும்பத்து உறுப்பினர்களுடன் கனவிலோ, பளாஷ்பேக் சீனிலோ லெஷ்மி அம்மாள் வந்து பேசுவது போல் அடிக்கடி காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஷீலா தற்போது எந்த கனவிற்காக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. இந்த ரீ-என்ட்ரி பதிவுகளை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் 'இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்ல இருந்திருக்கலாம்' என லெஷ்மி அம்மாவை இறந்ததாக காட்டியதை கிண்டலடித்து கலாய்த்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.