போதை ஏறி அவிழ்ந்த ஆடை; பெண் பிரதமர் வீடியோ வைரல்!

பின்லாந்து நாட்டு பிரதமராக பதவி வகித்து வருபவர் சன்னா மரீன் (34). ஆளும் சோவியத் டெமாக்ரட்டிவ் கட்சியை சேர்ந்த சன்னா மரீன் உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.

பின்லாந்து நாட்டின் பெண் பிரதமரான சன்னா மரீன் சிறந்த பாடகியும் ஆவார். பிரதமர் சன்னா மரீன் அடிக்கடி, சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையான ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே, சன்னா மரீன் கடந்த 2020ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து, கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார். அப்போது நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி செய்யலாமா? என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.

நாடு திரும்பும் நித்தியானந்தா?; இறுகியது பிடி.. சீடர்கள் அதிரடி!

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் புகுந்த நெட்டிசன்கள் பிரதமர் சன்னா மரீனை கடுமையாகவே சாடினர். இந்த பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து பிரதமரை எதிர்க்கட்சிகளும் தங்கள் பங்குக்கு வறுத்து எடுத்தன.

இந்நிலையில் பிரதமர் சன்னா மரீன் அங்கு உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டார். இந்த விருந்தில், பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை பார்த்த பின்லாந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பிரதமர் சன்னா மரீனின் இந்த திடீர் செயலுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இருக்கையின் நுனிக்கு வந்த ஸ்டாலின்; அதிர்ச்சி தகவல் கூறும் அண்ணாமலை!

அதுமட்டுமல்லாமல் பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் பிரதமரே இந்த செயலில் ஈடுபடுவதா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் நிறுத்தாமல் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ பின்லாந்து முழுவதும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே விருந்தின்போது பிரதமர் சன்னா மரீன் போதை பொருள் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கு பிரதமர் சன்னா மரீன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, போதை பொருள் சோதனைக்கும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

எடப்பாடிக்கு செமயா 2 சான்ஸ்; தவற விட்டால் தனிக்கட்சி தான்!

மேலும், பார்ட்டியில் மதுவை தவிர வேறு போதைப் பொருட்களை பயன்படுத்தவில்லை என்றும் நடனம் ஆடியது, பார்ட்டி எல்லாம் சட்டப்படியான விஷயங்கள் என்றும் சன்னா மரீன் கூலாக விளக்கம் அளித்து இருப்பதை நாட்டு மக்கள் விநோதமாக பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.