மாட்டு மந்தையில் மறைந்திருக்கும் கரடி… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து மாயாஜாலம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. நெட்டிசன்கள் அதன் சுவாரசியத்தில் கிறங்கிப் போய் வெறித்தனமாக படங்களைப் பார்த்து விடை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதிலும், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மாட்டு மந்தையில் ஒரு கரடி மறைந்திருக்கிறது. அந்த கரடியை 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி. ஏனென்றால், இந்த புதிர் மிகவும் சவாலானது.

நவீன வாழ்க்கையில், கணினியில் வேலை செய்பவர்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் அவர்களைத் தேற்றுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் வித்தியாசமானது அதே நேரத்தில் சுவாரசியமானது. அது எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும் என்றால், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவால் முதல் பார்வையில் மிகவும் எளிமையாகத் தோன்றும். இரண்டாவது பார்வையில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், உற்று கவனித்தால் மாயாஜாலம் காட்டும். நீங்கள் முழித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பு, தீவிரமாக விடை தேடத் தொடங்கினால், உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது, உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும். இப்படியான சுவாரசியத்தால்தான் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுக்கிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வைரலாகி வருகிறது. இந்த படம் ஒருவர் குதிரையில் சென்று மாடுகளை மேய்க்கிறார். அந்த மாட்டு மந்தையில், ஒரு கரடி எப்படியோ வந்துவிட்டது. ஆனால், அந்த கரடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அந்த கரடியை 8 நொடிகளில் கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்பதுதான் உங்கள் அனைவருக்குமான சவால். அப்படி கண்டுபிடித்து சொல்வது அவ்வளவு சுலபம் அல்ல. அது மிகவும் கடினமானது. இந்த சவாலை ஏற்று நீங்கள் 8 நொடிகளில் கரடியைக் கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்க கில்லிதான்.

இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மாட்டு மந்தைக்கு இடையே மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நிஜமாவே நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். கரடி ஓரத்தில் இருக்கிறது. இப்பொது நீங்கள் கரடியை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இந்த படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாக உற்றுப் பாருங்கள்.

உங்களால் இன்னும் கரடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். மாட்டு மந்தையில் கரடி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சியுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.