சென்னை
:
2006-ம்
ஆண்டு
கெளதம்
மேனன்
இயக்கத்தில்
கமல்ஹாசன்
நடிப்பில்
வெளியாகி
செம
ஹிட்டான
படம்
“வேட்டையாடு
விளையாடு”.
ஜோதிகா,
பிரகாஷ்
ராஜ்,
கமலினி
முகர்ஜி,
டேனியல்
பாலாஜி,
ஜானகி
சுபேஸ்,
முமைத்
கான்,
அதுதி
சர்மா
போன்ற
பலர்
நடித்திருந்தனர்.
இப்படம்
வசூல்
ரீதியாகவும்,
விமர்சன
ரீதியாகவும்
நல்ல
வெற்றியை
பெற்றது.
அதற்கு
முன்னர்
வெளியான
“படையப்பா”
படத்தின்
வசூல்
சாதனையை
இப்படம்
முறியடித்தது.ஹாரிஸ்
ஜெயராஜ்
இசையில்
இப்படத்தில்
இடம்பெற்ற
பாடல்கள்
அனைத்தும்
இன்றுவரை
பலரின்
விருப்பப்பட்டியலில்
முன்னணி
இடம்
வகிக்கிறது.
இப்படத்தில்
போலீஸ்
அதிகாரி
ரோலில்
சிறப்பாக
நடித்ததற்காக
கமல்ஹாசனுக்கு
தமிழக
அரசு
திரைப்பட
விருதுகள்
விழாவில்
சிறந்த
நடிகருக்கான
விருது
வழங்கப்பட்டது.
பொதுவாக
படங்கள்
வெற்றியடைந்தால்
அதன்
இரண்டாம்
பாகம்
உருவாகுவது
வழக்கமாகி
வருகிறது.
வேட்டையாடு
விளையாடு
2
கன்ஃபார்ம்
அந்த
வகையில்
ரசிகர்கள்
மத்தியில்
அதிகம்
வரவேற்பை
பெற்ற
இந்த
படத்தின்
இரண்டாம்
பாகம்
உருவாகப்போவதாக
தகவல்கள்
சமீபத்தில்
வெளியானது.
இந்த
படத்தின்
இரண்டாம்
பாகம்
உருவாகுவது
குறித்த
தகவலை
கன்ஃபார்ம்
செய்த
டைரக்டர்
கௌதம்
மேனன்,
‘வேட்டையாடு
விளையாடு’
படத்தின்
இரண்டாம்
பாகத்திற்கான
கதை
தயார்
நிலையில்
உள்ளது.இப்படம்
குறித்து
ஏற்கனவே
ஒருதடவை
நான்
கமலிடம்
பேசிவிட்டேன்,
தற்போது
மீண்டும்
இதுகுறித்து
பேசப்போகிறேன்’
என்று
தெரிவித்தார்.

என்ன
இப்படி
ஷாக்
கொடுக்குறார்
வேட்டையாடு
விளையாடு
2
பற்றிய
தகவல்கள்
தீயாய்
பரவி
வரும்
நிலையில்,
சமீபத்தில்
மீடியா
ஒன்றிற்கு
பேட்டி
அளித்த
கெளதம்
மேனன்
சொன்ன
தகவல்
பலரையும்
அதிர்ச்சி
கொடுத்துள்ளது.
ஆசையாய்
எதிர்பார்த்திருந்தால்
இவர்
இப்படி
ஷாக்
கொடுக்கிறாரே
என
தெரிவித்துள்ளனர்.

நான்
செதுக்கிட்டு
இருக்கேன்
கெளதம்
மேனன்
தனது
பேட்டியில்,
ஏற்கனவே
வேட்டையாடு
விளையாடு
படத்திற்காக
120
பக்கத்திற்கு
கதை
தயாராக
உள்ளது.
கடைசி
அரை
மணி
நேரத்திற்கான
கதையை
செதுக்கிட்டு
இருக்கேன்.
இந்த
படம்
எப்போது
துவங்கப்படும்
என
தெரியவில்லை.

அவர்
நடிப்பாரான்னு
தெரியல
அநேகமாக
என்னுடைய
அடுத்த
படம்
இதுவாக
இருக்கலாம்.
ஆனால்
கமல்
சார்
இதில்
நடிப்பாரா
என்று
தெரியவில்லை.
ஆனால்
இதை
எனது
அடுத்த
படமாக
இயக்குவதற்காக
நான்
முயற்சி
செய்து
வருகிறேன்
என்றார்.தற்போது
இந்த
வீடியோ
வேகமாக
பரவி
வருகிறது.

இவர்
டைரக்ட்
பண்ண
வேணாம்
அதே
சமயம்
இந்த
வீடியோவை
பார்த்த
நெட்டிசன்கள்,
வேட்டையாடு
விளையாடு
2
ஓகே.
ஆனால்
டைரக்டர்
கெளதம்
மேனன்
வேணாம்.
அந்த
கதையை
அப்படியோ
லோகேஷ்கிட்ட
கொடுக்க
சொல்லுங்க.
செதுக்கிடுவாரு.
இவருக்கு
இப்போ
இருக்க
ஆடியன்சோட
மீட்டர்
தெரியல.
ஆனால்
லோகி
அதை
கரெக்ட்டா
புரிஞ்சு
வச்சிருக்கார்.
என்ன
விளையாடுறீங்களா…விஜய்யின்
யோகன்
படத்தை
எப்போ
எடுக்குறதா
பிளான்?
என
கேட்டு
வருகின்றனர்.