சமந்தாவை மிஞ்சிய ராஷ்மிகா…இதில் இவர் தான் நம்பர் ஒன் நடிகையா ?

சென்னை : சமீப காலமாக நடிகைகள் பலரும் சோஷியல் மீடியாக்களில் போட்டி போட்டு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். யார் வைரல் பதிவுகளை போடுவது, யார் அதீத கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தை தங்கள் ஈர்ப்பது என போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா ஹீரோயின்கள் மட்டுமல்ல சீரியல் நடிகைகளும் கூட தற்போது இதில் இறங்கி விட்டனர். சில டாப் நடிகைகள் தங்கள் பக்கங்களில் விளம்பர வீடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளை போட குறிப்பிட்ட தொகையை பெற்று வருகின்றனர்.

நடிகைகளின் இந்த போட்டியால் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள், அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்து வருகிறது.இவர்களில் முதலிடத்தை பிடிப்பது யார் என கடும் போட்டியே நடந்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் போட்டா போட்டி

தங்கள் ஹிட் படங்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை டாப் நடிகைகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கும் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக சமந்தா, ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, ஸ்ருதி ஹாசன் போன்ற வெளியிடும் போட்டோக்கள், வீடியோக்களுக்கு அதிக லைக்குகள் குவியும். இவர்கள் போஸ்ட் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அவை வைரலாகி விடுகின்றன.

 முதலிடத்தில் ராஷ்மிகா

முதலிடத்தில் ராஷ்மிகா

இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்களை கொண்ட நடிகைகள் யார்? இவர்களின் யாருக்கு எவ்வளவு ஃபாலோவர்கள் உள்ளனர்? என்பது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் சமந்தாவை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார்.

 என்னது இவ்வளவு வித்தியாசமா

என்னது இவ்வளவு வித்தியாசமா

முதலிடத்தில் இருக்கும் ராஷ்மிகாவிற்கு 32.7 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இவரைத் தொடர்ந்து சமந்தா – 24.3 மில்லியன், காஜல் அகர்வால் – 23.4 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். இந்த பட்டியலை பார்த்து முதல் இடத்தில் இருப்பவருக்கும், இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கும் இவ்வளவு வித்தியசமா? என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

 கடைசி இடத்தில் இவரா

கடைசி இடத்தில் இவரா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ஃபாலோவர்களை வைத்துள்ள நடிகைகள் பட்டியலில் 4வது இடத்தில் ரகுல் ப்ரீத் சிங், 5வது இடத்தில் பூஜா ஹெக்டே, 6வது இடத்தில் ஸ்ருதிஹாசன், 7வது இடத்தில் தமன்னா, 8வது இடத்தில் கீர்த்தி சுரேஷ் உள்ளனர். மற்ற டாப் நடிகைகள் 20 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்கள பெற்றுள்ள நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு 13.5 மில்லியன் ஃபாலோவர்கள் மட்டுமே உள்ளனர்.

 கைவசம் உள்ள படங்கள்

கைவசம் உள்ள படங்கள்

மிஷன் மங்கள், குட் பை, அனிமல், புஷ்பா 2, வாரிசு என பல மெகா பட்ஜெட் படங்கள் ராஷ்மிகாவின் கைவசம் உள்ளன. இதே போல் சமந்தாவிற்கு சாகுந்தலம், யசோதா, குஷி படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ளன. கைவசம் முதல் முறையாக நடிக்க உள்ள ஹாலிவுட் படம் மட்டுமே உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.