சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது வெடித்துச் சிதறிய செல்போன்: தீ விபத்தில் சிக்கி இளைஞர் பலி

கோபிசெட்டிபாளையம் பகுதியில் செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ படித்த பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், யஸ்வந்த, விவின் என்ற இரு மகன்களும் உள்ளனர். நேற்று இரவு இரண்டாவது மகன் விவினை சிறிது தூரத்தில் உள்ள தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார் அர்ஜூன்.
image
அங்கு ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கிக் கொண்டிருக்கவே அருகே இருந்த, சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை இரும்பு தகடால் அமைக்கப்பட்டிருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கி உள்ளார். தூங்கும்போது செல்போனை சார்ஜ் போடுவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார் அர்ஜூன்.
image
எதிர்பாராதவிதமாக நள்ளிரவில் செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ குடிசையில் பரவியது. தீ விபத்தில் குடிசையை வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
image
அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவி கஸ்தூரி மற்றும் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் சுற்றிலும் தென்னை ஓலையால் மறைக்கப்பட்டு இருந்ததாலும் தீ கொழுந்து விட்டு எரிந்ததாலும் அர்ஜூனை கப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
image
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அர்ஜூன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் சார்ஜர் வெடித்து இருப்பது தெரிய வந்தது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.