தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’ ( Remake of Aadavari Matalaku Arthale Verule), ‘குட்டி’ (Remake of Arya) , ‘உத்தம புத்திரன்’ (Remake of Ready) ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் 4-வது முறையாக இயக்குநர் மித்ரன் ஜவஹர் கூட்டணி அமைத்து உருவாக்கியுள்ளப் படம் ‘திருச்சிற்றம்பலம்’. நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் இந்தப் படம் உருவானது. மேலும், தெலுங்கு, மலையாளப் படங்களை ரீமேக் செய்து வந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர், ‘மதில்’ (ஜீ5 ஓ.டி.டி.)படத்திற்குப் பிறகு, குறிப்பாக திரையரங்கில் நேரடியாக வெளியாகும் வகையில் இயக்கியிருந்தப் படம்தான் ‘திருச்சிற்றம்பலம்’. இதனால் ஆரம்பம் முதலே இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு தனுஷின் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்த கடந்த 18-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.

image

ஃபீல் குட் படமாக இருப்பதாக ரசிகர்கள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குடும்ப ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளதால், கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தப் படம் 20 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் நாளில் 9 கோடி ரூபாய் படம் வசூலித்தநிலையில், நேற்று விடுமுறைத்தினம் என்பதால், 11 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதால் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வசூல் இன்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.