நடிச்சதே ஓரிரு படம் தான்..அதுக்குள்ள கோடியில் சம்பளமா?அனன்யா பாண்டேவை கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை : லைகர் படத்தில் நடித்ததற்காக நடிகை அனன்யா பாண்டே வாங்கி உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து ராஷ்மிகாவுடன் கீதா கோவிந்தம், டியர் சாம்ராட் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

மகாநதி, நோட்டா என இரு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழும் முன்னணி நாயகனாக கருதப்பட்டார். அர்ஜுன் ரெட்டி மற்றும் மகாநதி போன்ற படங்களில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

விஜய் தேவரகொண்டா

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் திரைப்படம் ‘லைகர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

லைகர்

லைகர்

மும்பையில் குடிசை பகுதியில் வாழும் விஜய் தேவரகொண்டா சர்வதேச அளவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்கிறார். ஒரு சாதாரண இடத்தில் இருந்து இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு எவ்வாறு உயர்ந்தார் என்பதை மாஸ், ஆக்ஷன் கலந்த மிரட்டலாக சொல்லியிருக்கும் கதை தான் லைகர். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

மிரட்டலான டிரைலர்

மிரட்டலான டிரைலர்

இப்படத்தின் கடந்த மாதம் வெளியானது. அதில், ஒரு லயனுக்கும் டைகருக்கும் பொறந்தவன் இவன் என்று மிரட்டலாக குரலில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருந்தார். அதிரடி ஆக்ஷ்ன்,ரொமான்ஸ் என தரமாக இருந்த இந்த டிரைலர் ரசிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிராண்டானது.

மைக் டைசன்

மைக் டைசன்

இந்திய சினிமாவில் முதல் முறையாக இப்படத்தில் மைக் டைசன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு கௌரவ வேடம் என்றும், படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியமான திருப்பம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி வெளியாகவுள்ளது.

கோடியில் சம்பளமா?

கோடியில் சம்பளமா?

இந்நிலையில்,லைகர் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ரூ35 கோடி சம்பளம் வழங்கியதாகவும்,அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அனன்யா பாண்டேவுக்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு வெளியான ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அனன்யா, இதையடுத்து, பதி பட்னி அவுர் வோ படத்தில் நடித்து பிரபலமானார். ஓரிரு படங்களில் மட்டுமே நடித்துள்ள அனன்யாவுக்கு கோடியில் சம்பளமா? என ரசிகர்கள் வாய்பிளந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.