மோடி – அமித் ஷா : 'யோகி'யின் அதிருப்தி- எடப்பாடி மறுத்தது ஏன்?-மதராஸ் அடையாளங்கள்|விகடன் ஹைலைட்ஸ்

மோடி – அமித் ஷா : ‘அத்வானியையே தூக்கி வீசியவர்களுக்கு ‘யோகி’ எம்மாத்திரம்..?’

அமித் ஷா – நரேந்திர மோடி

திரடி அரசியலுக்குப் பெயர் போனவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

‘இந்துத்வா அரசியலை மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர், பா.ஜ.க கனவு காணும் சனாதன ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்…’ என்றெல்லாம் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டபோதிலும், இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தவர் யோகி. மேலும் ‘2024-ல் மோடிக்கு மாற்றாக பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்’ என்றெல்லாம் பேச்சுகள் அடிபட்டன.

ஓரங்கட்டப்படுகிறாரா யோகி?

இந்த நிலையில், அண்மையில் நடந்த பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் குழு மாற்றத்தை முன்வைத்து,

* யோகி ஆதித்யநாத் பா.ஜ.க மேலிடத்தால் ஓரம்கட்டப்படுவதாகவும்,

* உத்தரப்பிரதேசம் மாநிலத்தைத் தாண்டி அவர் ஒரு சக்தியாக உருவெடுப்பதை மோடி – அமித்ஷா கூட்டணி விரும்பவில்லை என்றும் உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

பா.ஜ.க-வில் அதிகபட்ச அதிகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சிமன்றக் குழு திகழ்கிறது. கட்சியின் மாநில தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களைத் தேர்வுசெய்வது, கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திற்கும் பொறுப்பு வகிக்கிறது.

அந்த வகையில், பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் குழு சில தினங்களுக்கு முன் மாற்றியமைக்கப்பட்டது. இதில் ஜே.பி. நட்டா, மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற கட்சியின் பெருந்தலைவர்கள் வழக்கம்போல் இடம்பெற்றுள்ள நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு மாநில தலைவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனால்,

* இக்குழுவில் இடம்பெற்றிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டது பா.ஜ.க மட்டத்தில் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி இருந்தது.

* இவையெல்லாவற்றையும் விட, உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜ.க-வை இரண்டாவது முறையாக அமோக வெற்றிபெறச் செய்து ஆட்சியில் அமர்த்திய யோகி ஆதித்யநாத்திற்கு முக்கியப் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படாதது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமித் ஷா, மோடி

ஏமாற்றமும் அதிருப்தியும்

பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் குழுவில் யோகி மட்டுமல்லாது, பா.ஜ.க முதலமைச்சர்கள் யாருக்குமே இடம் அளிக்கப்படவில்லை. யோகிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே, ஏற்கெனவே இடம்பெற்றிருந்த சிவ்ராஜ் சிங் சவுகானும் நீக்கப்பட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்த

* தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார் யோகி.

* அதே சமயம், புதிதாக பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டதற்கு யோகியைத் தவிர மற்ற பா.ஜ.க முதலமைச்சர்கள் அனைவரும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

* ஆனால் யோகி மட்டும், வாழ்த்து எதுவும் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் ட்விட்டரில் மற்ற செய்திகள், பதிவுகளையெல்லாம் போட்டு ஆக்டிவாகத்தான் இருக்கிறார்.

* இதன் மூலம் மோடி – அமித் ஷா மீதான யோகியின் அதிருப்தி வெளிப்பட்டுள்ளதாகவும் உத்தரப்பிரதேச பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோடி – அமித் ஷா-வின் கணக்கு

இந்த நிலையில்,

* பா.ஜ.க மேலிடத்தை ஓவர்டேக் செய்யும் அளவுக்கு எந்த ஒரு மாநில தலைவர்களோ அல்லது முதலமைச்சர்களோ தலையெடுப்பதை மோடி – அமித் ஷா கூட்டணி விரும்பவில்லை என்றும்,

* மாநிலத்தைத் தாண்டி அவர்கள் செல்வாக்குமிக்கவர்களாக வளர்வது கட்சித் தலைமைக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும் என்று கருதுவதாகவும் பா.ஜ.க டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* இதன் வெளிப்பாடுதான் யோகி, பா.ஜ.க-வின் ஆட்சிமன்றக் குழுவில் மட்டுமல்லாது, தேசிய அளவிலான முடிவெடுக்கக்கூடிய எந்த ஒரு அதிகாரமிக்க கமிட்டியிலும், அவ்வளவு ஏன் தேர்தல் கமிட்டியில் கூட இடமளிக்கப்படவில்லை என்று அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

பட்னாவிஸுக்கும் இதுதான் நடந்தது…

இந்த நிலையில்,

* அண்மையில் ஆட்சி மாற்றம் நடந்த மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ்தான் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

* ஆனால், மாநிலத்தில் பட்னாவிஸ் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே, சிவசேனாவிலிருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு பா.ஜ.க-வைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருந்தபோதிலும், அவரையே முதல்வர் பதவியில் அமர்த்தினார் அமித் ஷா. இதே கதைதான் தற்போது யோகிக்கும் நடந்துள்ளது என்று சொல்லி வருந்துகின்றனர் யோகி ஆதரவாளர்கள்..!

அரசியல் என்றாலே சூழ்ச்சிகளும் தந்திரங்களும் நிறைந்த பரமபதம் ஆட்டம்தானே… ஆணானப்பட்ட அத்வானியையே தூக்கி வீசியவர்களுக்கு யோகி எம்மாத்திரம்..?

இந்த நிலையில், ‘காங்கிரஸுக்கு மாற்று நாங்கள்தான்… இனி தேசிய அரசியலில் பா.ஜ.க-வுக்கும் எங்களுக்கும்தான் போட்டியே’ என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறது ஆம் ஆத்மி. அதை தட்டி வைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளதுதான் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் நடத்தப்பட்ட சி.பி.ஐ சோதனை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான முழுமையான செய்திகளைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்…

அதிமுக: இணைந்து பயணிக்க எடப்பாடி திமிறி மறுத்தது ஏன்?

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

“நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று எடப்பாடிக்கு தூது அனுப்பினார் பன்னீர். அடுத்த சில மணிநேரத்திலேயே, “பன்னீருடன் எந்த இணைப்பும் கிடையாது” என எடப்பாடி தூது படலத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

பன்னீர் சமரசம் பேசவரும் நிலையில், அதற்கு எடப்பாடி மறுப்பு தெரிவித்ததன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

மெட்ராஸ் தினம்: மதராஸும் தொலைந்துபோன அதன் அடையாளங்களும்..!

மெட்ராஸ் வரலாறு

கஸ்ட் 22 – மெட்ராஸ் தினம். இந்தத் தருணத்தில் அன்றைய மெட்ராஸ் பட்டணத்தின் பாரம்பரிய சின்னங்கள் மறைந்துவருகின்றன என்பதை விட ‘மெட்ராஸ்’ என்கிற வார்த்தையே காணாமல் போய்விட்டது என்பதே துயரமான ஒன்றுதான்.

வரலாற்றின்படி, இது வெள்ளையர்களால் உருவான நகரம் என்றாலும் அதற்கும் முன்பு இங்கு ஊர்களே இல்லையா என்கிற குரல்கள் இப்போது நிறையக் கேட்கின்றன.

சுயமரியாதை கொண்ட மக்களின் புகலிடமாக மாறிய மதராஸும், அமைதியான தண்ணீர் சத்திரங்கள், அழகிய மணிக்கூண்டுகளுடன் பசுமையாக இருந்த பூங்காக்களைக் கொண்ட விசாலமான சாலைகள், ஜட்கா வண்டிகள்… என தொலைந்துபோன சென்னையின் அடையாளங்கள் குறித்தும் சொல்ல ஏராளமாக இருக்கின்றன. அதனை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

கிசுகிசு: தோட்டத்துத் தலைவரின் அமைதிக்கு காரணம்…

கிசுகிசு

ரோட்டா காமெடி நடிகர், எந்த நேரத்தில் கல்வியின் அவசியம் குறித்து வாய் திறந்தாரோ… அவருக்கு எதிரான சர்ச்சைகளை வரிசையாகக் கட்டவிழ்த்துவருகிறது காவிக் கட்சி. ” இத்தனை வருஷ வாழ்க்கையில் இவ்வளவு நெருக்கடிகளை நான் பார்த்ததே இல்லை” என பரோட்டா காமெடி நடிகர் புலம்பும் அளவுக்குக் காவிக் கட்சியின் ஆன்லைன் ஆட்கள் அலப்பறை கொடுக்கிறார்களாம்.

இது தவிர,தோட்டத்துத் தலைவரின் அமைதிக்கு காரணம்… வாரிசுப்புள்ளியின் பெயரைச் சொல்லி விளையாடிய ரூல்ஸ் அமைச்சர், அண்ணன் தலைவர் கார் வாங்கிய விவகாரம்… எனப் பல அரசியல் சீக்ரெட்ஸ்களை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

மிஸ்டர் மியாவ்: அசைந்து கொடுக்காத உச்ச புகழ் இசைக்காரர்!

தேஜு அஸ்வினி

ச்ச புகழ் இசைக்காரரை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டுவந்துவிடத் துடித்தார்களாம் பிரகாச சேனலும், நடிகர் பெயர்கொண்ட சேனலும். ஆனால், அவர் மனதை அசைக்கவே முடியவில்லையாம். அதற்கு காரணம்…

சூப்பர் நடிகர் படத்துக்கு பட்ஜெட் விஷயத்தில் ரொம்பவே கெடுபடி காட்டுகிறதாம் பிரகாச சேனல். இதனால் சூப்பர் நடிகர்…

‘மிஸ்டர் மியாவ்’ சொல்லும் சுவாராஸ்யமான சினிமா தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

“நாங்கள் நிறைய தவறுகள் செய்திருக்கிறோம்; ஆனால்..?!” – ராஜீவ் காந்தி கிளாசிக் பேட்டி#AppExclusive

Rajiv Gandhi

மாலை மணி ஏழு. புது டில்லி, அக்பர் சாலையில் உள்ள இந்திரா காங்கிரஸின் தலைமை அலுவலகம்… கண்ணில் தென்படும் காங்கிரஸ் தலைவர்கள். இளைய தலைமுறையினரின் ஆரோக்கியமான ஊடுருவல் நிறைய இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.

ஏழு ஐந்து…அம்பாஸடர் வண்டியைத் தானே ஓட்டிக் கொண்டு ராஜீவ் காந்தி வந்ததும், திடுமென இடம் அதிகமாய் பரபரக்கிறது…

இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!

ராஜீவ் காந்தியை சந்தித்தேன்… – சிவசங்கரி! என்ற தலைப்பில் 19.02.1984, 26.02.1984 ஆகிய தேதிகளில் ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான பேட்டியை முழுமையாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.