ரஜினிகாந்த் உடன் லெஜண்ட் சரவணன்.. மறக்க முடியாத நினைவுகள் என ட்வீட்.. என்ன விஷயம்?

சென்னை: லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை தி லெஜண்ட் படத்தின் மூலம் சமீபத்தில் நிறைவேற்றினார்.

அவரது கடும் உழைப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மூன்று வாரங்களை கடந்தும் தி லெஜண்ட் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது என தொடர்ந்து ட்வீட் போட்டு வந்தார் லெஜண்ட் சரவணன்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

சினிமாவில் அறிமுகம்

மிகப்பெரிய பிசினஸ் மேக்னட்டான லெஜண்ட் சரவணன் தனது துணிக்கடை விளம்பரங்களில் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா உள்ளிட்டோருடன் ஆடிப் பாடி நடித்து வந்த நிலையில், சினிமாவில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியானதும் பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்திலேயே தி லெஜண்ட் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

நல்ல மெசேஜ்

நல்ல மெசேஜ்

ரஜினிகாந்தின் சிவாஜி படத்தை போல தி லெஜண்ட் திரைப்படத்திலும் நல்ல ஒரு மெசேஜ் மக்களுக்காக சொல்லப்பட்டு இருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் வந்த போதும், லெஜண்ட் சரவணனின் முயற்சியை பலரும் பாராட்டினர். சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டு பிடித்து இலவசமாக கொடுக்கும் மருத்துவராக நடித்திருந்தார் லெஜண்ட் சரவணன்.

ரஜினிகாந்த் உடன் லெஜண்ட்

ரஜினிகாந்த் உடன் லெஜண்ட்

நடிகர் ரஜினிகாந்த் உடன் லெஜண்ட் சரவணன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு டிரென்ட் செய்து வருகிறார். Moments with Superstar என கேப்ஷன் கொடுத்து ரஜினிக்கும் டேக் செய்துள்ளார் தி லெஜண்ட் சரவணன். லெஜண்ட் ட்வீட் செய்த போட்டோக்களை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

என்ன பிளான்

என்ன பிளான்

தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் லெஜண்ட் சரவணன். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் அதிகமான ரசிகர்களை ஈர்க்க முயற்சித்து வருகிறார். தி லெஜண்ட் படத்தோடு நடிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து நடிக்கவும் திட்டங்கள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.