Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 13,272 பேருக்கு கொரோனா பாதிப்பு

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு

மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் வெள்ளிக்கிழமை சிபிஐ சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு

பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.20)  தொடங்கி ஆகஸ்ட் 24 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-இல் தொடங்கி அக்டோபர். 23 வரை நடைபெறும்.

சிறப்புப் பிரிவு, பொதுப் பிரிவு கலந்தாய்வு இணைய வழியிலேயே நடைபெறுகின்றன. கிராமப்புற மாணவா்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள 110 பொறியியல் மாணவா் சோ்க்கை மையங்களுக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

சென்னை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 383 ஆவது சென்னை தினத்தையொட்டி,  பெசன்ட் நகர் கடற்கரையில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி வன்முறை

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தில், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், கைதானவர்களில் அப்பாவிகளை அடையாளம் காணக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
10:05 (IST) 20 Aug 2022
தங்கம் விலை உயர்வு

சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 64 உயர்ந்து 38,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

10:03 (IST) 20 Aug 2022
இந்தியாவில் மேலும் 13,272 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 13,272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 13,900 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தனர்.

09:33 (IST) 20 Aug 2022
சிறுத்தை சிக்கியது

உதகை அருகே 4 வயது சிறுமியை தாக்கி கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது. சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்தில் விட வனத்துறை முடிவு செய்துள்ளது.

09:02 (IST) 20 Aug 2022
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி-20 என இரண்டு தொடர்களுக்கும், ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் செயல்படுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

09:02 (IST) 20 Aug 2022
குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்

ராஜஸ்தானில் 1.35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு 3 ஆண்டுகளுக்கான இலவச இணைய வசதியுடன், இலவச ஸ்மார்ட்போன் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

09:02 (IST) 20 Aug 2022
ராஜிவ் காந்தி பிறந்தநாள்

ராஜிவ் காந்தியின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

09:00 (IST) 20 Aug 2022
கேரளாவில் மீண்டும் கனமழை

கேரளாவில் ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.