சென்னைக்கு வயது 383.. Save The blue பேரில் பெசன்ட் நகர் பீச்சில் தூய்மைப்பணி!

383வது சென்னை தினத்தையொட்டி , யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட யமஹா வாகன வாடிக்கையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரை பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தினர்.
யமஹா நிறுவனத்தின் தலைவர் ஈஷின் சிஹானா மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையர் சினேகா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து, பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக ”Save The Blue” என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து கடற்கரையில் வாகன பயணமும் நடைபெற்றது.
ALSO WATCH

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.