யாஷிகாவின் வேற லெவல் வொர்க் அவுட்- வீடியோ செம வைரல்

யாஷிகா ஆனந்த் லெவல் வொர்க் அவுட் வீடியோ: ஜீவா – காஜல் அகர்வால் நடித்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இதை அடுத்து இருட்டறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, தி லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும் வீடியோக்களையும் களமிறக்கி கதிகலங்க வைத்து வருகிறார். கார் விபத்துக்கு பிறகு 3 மாதங்கள் ஓய்வில் இருந்த யாஷிகா மீண்டும் பழையபடி கவர்ச்சி ரூட்டில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தனர். சுமார் 3.5 மில்லியன் பேர் அவரை ஃபாலோ செய்து வரும் நிலையில், ரசிகர்களுக்காக தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் எஸ்ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த கடமை செய் திரைப்படம் தியேட்டரில் வெளியானது. ஆனால், அந்த படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இந்நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் செய்யும் கவர்ச்சியான வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் திணறடித்துள்ளனர். அதேபோல் வொர்க் அவுட் உடையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். அந்த வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் வெரித்தனம் ஃபிட்னஸ் கோல்கள் என கேப்ஷன் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. அத்துடன் இந்த வீடியோ இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் பச்சை நிற பிகினியில் நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதன் பின்னர் கருப்பு உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோக்கள் வெளியான உடனேவே சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.