லவ்வர் பக்கத்து பெட் எனக்குதான் வேணும்! மதுபோதையில் அடம்பிடித்த காதலனுக்கு அடி உதை!

தருமபுரி மாவட்டம் திப்பம்பட்டி அடுத்த கடம்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரும் நண்பராக இருந்துள்ளனர். இந்நிலையில் உதயகுமார் போச்சம்பள்ளி அடுத்த கீழ் மைலம்பட்டி கிராமத்தை சேர்ந்த வைஸ்ணவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் உதய குமாரின் மனைவியுடைய தங்கை (பள்ளி மாணவி) மீது காதல் கொண்ட பிரதாப் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி மாணவி  கடந்த ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாமல் போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவலறிந்த பிரதாப் தனது காதலியை பார்க்க மருத்துவமனைக்கு மது போதையில் வந்துள்ளார். 

இதில் பிரதாப்பின் நண்பர் உதயகுமார் அவரது மனைவி வைஸ்ணவி, அவரது அம்மா ஆகியோர் பள்ளி மாணவியை பார்க்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பிரதாப் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் உதயகுமார் பிரதாப் இடையே சண்டையாக மாறி கைகலப்பு ஏற்ப்பட்டதில் பிரதப்பை அவரது நண்பர் உதய குமார் தாக்கி மருத்துவமனை படியில் இருந்து தூக்கி வீசினார். இதில் படுகாயமடைந்த பிரதாப் அவரது காதலியின் சிகிச்சை அறையின் பக்கத்து படுக்கையில் தான் நான் சிகிச்சை பெறுவேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

இதுகுறித்த தகவலறிந்த போச்சம்பள்ளி போலீசார் அங்கு வந்த பிரதாபிடம் பேச்சிவாரத்தை நடத்தி ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காதலியை நலம் விசாரிக்க வந்த காதலனுக்கு நண்பன் கொடுத்த அடியில் மருத்துவமனை படுக்கைக்கு சென்ற சம்பவம் ஒருபுறமிருக்க இவர்களது சண்டையால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பெரும் அவதிக்குளாகினர். இதனால் மருத்துவமனையில் ஒரு மணி நேரத்திக்கும் மேலாக பரபரப்பு ஏற்ப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.