விபத்தில் உயிரிழந்த நாய் – ஊர்முழுக்க இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி

மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கர்-கார்குழலி தம்பதியினர். இவர்கள் இருவருமே காவல் துறையில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கே காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இவர்களது இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னவோ இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள்தான். இவர்கள் தங்கள் வீட்டில் 4 நாய்களை அவற்றுக்கு செல்லப்பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதிலும் குறிப்பாக ‘சச்சின்” என்றழைக்கப்பட்ட நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக செல்வது வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலுக்குத்தான்.

அங்கு சென்று உற்சாக குளியல் போட்டுவிட்டுத்தான் வீடு திரும்பும். சச்சின் ஹரிபாஸ்கர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளது. குளித்துவிட்டு வரும்போது அப்பகுதியில் டீக்கடைக்காரர் நாள்தவறாமல் வைக்கும் ‘பன்”னை காலைச்சிற்றுண்டியாகச் சாப்பிட்டுவிட்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவது சச்சினின் வழக்கம்.

மயிலாடுதுறை,இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி,தஞ்சாவூர்,சாலை,சம்பவம்,இரங்கல்,நாய் உயிரிழப்பு, நாய் பலி, விபத்து, சோகம், இறக்கம்

வழக்கம்போல், நேற்று முன்தினம் வாய்க்காலுக்கு சென்று குளித்துவிட்டு, வீடு திரும்பும்போது சாலையைக் கடக்க முயன்ற சச்சினை அப்பகுதி வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறிது நேரத்திலேயே சச்சின் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மயிலாடுதுறை,இரங்கல் பேனர் அடித்து கண்ணீர் அஞ்சலி,தஞ்சாவூர்,சாலை,சம்பவம்,இரங்கல்,நாய் உயிரிழப்பு, நாய் பலி, விபத்து, சோகம், இறக்கம்

இதையடுத்து, சச்சினின் உடலை மீட்டு, நல்லடக்கம் செய்த ஹரிபாஸ்கர், சச்சனின் இறப்புக்கு அப்பகுதியில் இரங்கல் பேனரும் வைத்துள்ளார். தாங்கள் செல்லமாக வளர்த்த சச்சினுக்கு, புதைத்த இடத்தில் தங்கள் குழந்தைகளின் விருப்பப்படி கல்லறை அமைக்கப்போவதாகவும் நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.