ஜெயிலர் அப்டேட்..காலை11 மணிக்கு தரமான சம்பவம் காத்திருக்கு!

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இணையும்ஜெயிலர்’ படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியானது

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, மீனா, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜெயிலர்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அண்ணாத்த திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் இத்திரைப்படத்தை இயக்க உள்ளார்.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இந்த திரைப்படத்தின் டைட்டில் லுக் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில், படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்பதும் அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படம் தொடர்பாக 22.08.2022 அன்று, 11 மணியளவில் அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தற்போது ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

ஜெயிலர் படத்திற்கு சிகை அலங்காரம் செய்ய ஆர் ஆர் ஆர் போன்ற பிரபல படங்களுக்கு மேக் ஓவர் செய்த ஆலிம் ஹாக்கிங் தான் இந்த படத்திற்கும் ரஜினியின் ஸ்டைலிசாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், தமன்னா, பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் என முன்னணி நட்ஷத்திரங்கள் பலர் நடிக்கயுள்ளனர். மேலும் ராக்கி, தரமணி புகழ் இளம் ஹீரோ வசந்த் ரவியிடம் ஜெயிலர் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர் நடிக்கயுள்ளார்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு

சிந்துபாத், ஆடை, டாக்டர், குலு குலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய விஜய் கார்த்திக் கண்ணன் தான் தற்போது ஜெயிலர் ஒளிப்பதிவாளராக பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதை

கதை

மேலும், ஜெயில் படத்தின் படப்பிடிப்ப முழுக்க முழுக்க சிறையிலேயே எடுக்கப்படஉள்ளது. ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைக்க பிளான் போடுகிறது. அந்த சிறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஜெயிலரான ரஜினிகாந்த் அந்த பிளானை எப்படி முறியடித்து, சிறையை காப்பாற்றுவதுடன், கேங்ஸ்டர் கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.