நிலச்சரிவுகளை தடுக்க புதிய தொழில்நுட்பம்… இனி கவலை இல்லை!

மலை மாவட்டமான நீலகிரியில் மழைக்காலங்களில் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 

மேலும் மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை இயக்க வேண்டிய நிலையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்ட மலைப்பாதைகளில் ஏற்படும் நிலச்சரிவுகளை தடுக்கும் விதமாக மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக புதிய முறை ஒன்று கடந்த ஆண்டு  செயல்படுத்தப்பட்டது.

அதன்படி நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு சம இடைவெளியில் துளைகள் அமைத்து அதில் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பிகளை நடுகின்றனர். பின்னர் கம்பி வளை பொருத்தபட்டு மண் சரிவை தடுக்கும் விதமாக புற்களின் விதைகள் அதில் தூவப்படுகின்றன. 

மேலும் மேலிருந்து கீழாக ரப்பர் ஒயர்களும் பொருத்தபடுகின்றன. அப்போது புற்கள் நன்றாக வளர்வதுடன் நிலச்சரிவு ஆபாயமுள்ள இடம் கடின தன்மை கொண்டதாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

சோதனை முறையில் செயல்படுத்தபட்ட இது தற்போது வெற்றிகரமாகி உள்ளது. இந்த நிலையில் இந்த ஏற்பாடுகளை இன்று தமிழக போக்குவரத்து துறை செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 

இந்த புதிய முறைக்கு பாராட்டு தெரிவித்த அவர்கள் இந்த முறையை மாநிலத்தில் உள்ள அனைத்து மலை பாதைகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.