பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்பு: உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்ட பெண் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது குறித்து உடற்கூராய்வு நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை அரசு தரப்பில் விரி விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டது.

தேனியை சேர்ந்த பூங்கொடி மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தனது மகள் கனிமொழிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கருவுற்றதால் கடந்த ஜூன் மாதம் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி கடுமையான வலி காரணமாக உயிரிழந்தார்.

தவறான சிகிச்சையால் உயிரிழந்த காரணத்தினால் இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளித்த போது எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தன் மகளின் உடலை  மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அதே நேரத்தில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2 மூத்த தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் முன்னிலையில் உடற்கூறாய்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக அரசு தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.