முன்விரோதம் காரணமாக எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதி சேர்ந்தவர்  ராஜ்குமார் இவர் இங்கு  நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர்.

இந்த கொடூரமான தாக்குதலால், 20 க்கும் மேற்பட்ட எருமைகளுக்கு கடுமையான  காயம் அடைந்துள்ளன. தாய் , கன்று என அனைத்து கால்நடைகளுக்கும் தலை பகுதி, முதுகு, கால் என அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறை , காவல்துறை என அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து தற்போது அது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிட் வீச்சின் காரணமாக, கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள மாடுகள், உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில்  எருமை மாட்டிற்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில்  புளுகிராஸ் மற்றும் மாவட்ட கால் நிர்வாகம் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபண்ணைக்கு  உரிமையாளர்தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 30 லட்சத்திற்கு மேலாக, நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எருமைகள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள்  மீது, யாரோ சிலர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.