ரஜினியின் ஜெயிலர் ஃபர்ஸ்ட்லுக் எப்படி இருக்கு?… ஒத்த வார்த்தையில தனுஷ் போட்ட ட்வீட்

சென்னை : ரசிகர்கள் பல மாதங்களாக அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ரஜினியின் ஜெயிலர் பட ஷுட்டிங் இன்று சென்னையில் துவங்கி உள்ளது. இதற்காக போஸ் ஸ்டேஷன் போன்று செட் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஷுட்டிங் துவங்குவதை முன்னிட்டு ரஜினியின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. இந்த போஸ்டர் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளது. #Jailer, #Rajinikanth, #Poojai போன்ற ஹேஷ்டேக்குகள் தொடர்ந்து டிரெண்டிங் ஆக்கப்பட்டன.

ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி, வயதான கெட்அப்பில், ஸ்மார்ட் கிளாஸ் அணிந்து கம்பீரமாக நிற்பது போன்ற உள்ளது. வித்தியாசமான சல் அன்ட் பெப்பர் லுக், கழுத்தில் ஸ்டையிலான மெல்லிய செயின் என வயதான கேரக்டரிலும் செம ஸ்டையில் லுக்கில் கலக்குகிறார் ரஜினி.

ரஜினியின் புதிய லுக்

டைரக்டர் நெல்சன் திலீப்குமார், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்திருந்தனர். பிரபலங்கள் பலரும் இந்த போஸ்டரை பகிர்ந்து ரஜினியின் புதிய லுக்கை பாராட்டி வந்தனர்.

ஒத்த வார்த்தையில் ட்வீட் போட்ட தனுஷ்

ஒத்த வார்த்தையில் ட்வீட் போட்ட தனுஷ்

இந்த சமயத்தில் நடிகர் தனுஷ், ஜெயிலர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை பகிர்ந்து, வாவ் என ஒற்றை வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். இவர் போட்ட இந்த ஒற்றை வார்த்தை ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இருந்தாலும் நெட்டிசன்கள் சிலர், காலையில் வெளியிடப்பட்ட போஸ்டருக்கு மாலையில் நினைத்து பார்த்து ட்வீட் போட்டுள்ளார். போடலாமா, வேண்டாமா என யோசித்திருப்பார் போல என நக்கலாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

மனைவியுடனான பிரிவு

மனைவியுடனான பிரிவு

மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு தனுஷ் பெரிதாக ட்வீட் ஏதும் போடாமல் இருந்தால். அதற்கு பிறகு தொடர்ந்து தான் நடித்த படத்து வந்த படங்களான தி கிரே மேன், மில்லர், திருச்சிற்றம்பலம் படங்கள் தொடர்பான தகவல்கள், அப்டேட்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை மட்டுமே பகிர்ந்து வந்தார்.

டைட்டில் போஸ்டருக்கும் ட்வீட் போட்டாரே

டைட்டில் போஸ்டருக்கும் ட்வீட் போட்டாரே

மிக அரிதாகவே மற்ற படங்கள் பற்றி ட்வீட் போட்டார். சமீபத்தில் ரஜினிக்கு சினிமாவிற்கு வந்து 47 ஆண்டுகள் நிறைவடைந்ததை பலரும் கொண்டாடிய நிலையில் தனுஷ் அதற்கு வாழ்த்து கூட சொல்லவில்லை. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டி உள்ளார். இதற்கு முன் ஜெயிலர் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்ட போது கூட ஹார்ட் எமோஜிக்கள் மட்டும் பதிவிட்டு வணக்கம் சொல்லி இருந்தார்.

என்னப்பா நடக்குது இங்க

என்னப்பா நடக்குது இங்க

இதனால் ரசிகர்கள் இவர் எல்லோரையும் போல் தீவிர ரஜினி ரசிகர் என்ற அடிப்பையில் பாராட்டி உள்ளாரா அல்லது மாமனார் படம் என்பதால் பாராட்டி உள்ளாரா. மகன் பள்ளிக்கூட நிகழ்ச்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒன்றாக போய், போட்டோ வேறு எடுத்திருக்காங்க. மறுபடியும் ஒன்று சேர போகிறார்களா? ஒன்றுமே புரியலியே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.