இலங்கைத் தூதுவர் அமெரிக்க காங்கிரஸுக்கு நா‌ட்டி‌ன் மீதான அக்கறைக்கு நன்றி தெரிவிப்பு

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் இலங்கை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் டினா டைட்டஸுக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பாக, USAID ஏஜென்சிகள் மூலமாக கொவிட்-19 தடுப்பூசிகள் நன்கொடை, உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா எடுத்து வரும் பல முயற்சிகளுக்கு இலங்கை நன்றி தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய மருந்துகள், பிற பொருள் உதவி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து நாட்டிற்கு வரவிருக்கும் செயற்றிட்டங்களுக்கு ஆதரவு போன்ற உதவிகளை வழங்குவதில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனங்களின் முயற்சிகள் என்பவற்றுக்கு நன்றிகளை தெரிவித்து கடிதத்தை அனுப்பியுள்ளார்.

மேலும் அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்களால் ஆகஸ்ட் 18 அன்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோனி பிளிங்கன் மற்றும் USAID நிர்வாகி சமந்தா பவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பதிலளிக்கும் வகையில் இலங்கை மக்களுக்கு அவர்களின் அடிப்படை தேவைகளுக்கு கூடுதல் ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளது.

பல செயற்பாடுகளில் இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் USAID உடன் பணியாற்ற விரும்புவதாகவும் அடுத்த மாதம் USAID நிர்வாகி சமந்தா பவரை அன்புடன் இலங்கை எதிர்பார்த்துள்ளதாக சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர நட்புறவின் வலுவான அடித்தளத்தை கட்டியெழுப்ப நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.