3 பேருக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழி விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

சென்னை: பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 பேருக்கு செம்மொழி விருதுகளை வழங்கினார். அதன்படி,  முதல்வர் மு.க.ஸ்டாலின். முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் ழான் லுய்க் செவ்வியார், முனைவர் இராசேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு அப்போதைய முதல்வர்  கலைஞர் மு. கருணாநிதி  தமது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை தொற்றுவிக்கப்பட்டது. இந்த செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை  சார்பில் ஒவ்வோராண்டும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வழங்கப்படும் விருதுகளில் இது உயர்ந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் மு.கருணாநிதியின் உருவச்சிலையும் அளிக்கப்பட்டு வருகிறது.

விருதுக்கு பெறும் தகுதியாக, தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு  இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று 2020,2021,2022-ஆம் ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரும்பாக்கம் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி கவுரவித்தார். அதன்படி,  முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் ழான் லுய்க் செவ்வியார், முனைவர் இராசேந்திரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, தமிழ்மொழி செம்மொழி அந்தஸ்து பெற கலைஞர் கருணாநிதி எடுத்த முயற்சிகளை நாடு நன்கறியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், 2023-ஆம் ஆண்டுக்கான  கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2023-ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு.கருணாநிதிசெம்மொழித்தமிழ் விருதுக்குப் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இந்தியாவிலும் அயல்நாட்டிலும் வாழும் சிறந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் இவ்விருதினைப் பெறத் தகுதியானவர்களாவர். பரிந்துரைகள் வந்துசேர வேண்டிய இறுதி நாள் 31.01.2023. பரிந்துரைப் படிவத்திற்கும் பிற விவரங்களுக்கும் www.cict.in என்ற எங்கள் நிறுவன இணையத்தளத்தைப் பார்க்கவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.