77 ஆண்டு “மர்மம்”.. சுபாஷ் சந்திர போஸுக்கு என்னாச்சு? இதுவே உண்மை! விளக்கும் பேரன்.. யார் இந்த ஹசன்?

கொல்கத்தா: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்துக்கு பலர் பல்வேறு காரணங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது பேரன் சுகதா போஸ் உண்மை காரணத்தை விளக்கி இருக்கிறார்.

Recommended Video

  இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற தனி ராணுவத்தை அமைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

  இவர் சுதந்திரம் கிடைப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கடந்த 1945 ஆம் ஆண்டு காணாமல் போனார். சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் இன்று வரை கூறப்படுகின்றன.

  75வது சுதந்திர தினம்

  75வது சுதந்திர தினம்

  ஆனால், எந்த தகவல்களுக்கும் வரலாற்றுப் பூர்வமான சான்றுகள் இல்லை. இந்தியா அண்மையில் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி முடித்தது. இதில் காந்திக்கு அடுத்த இடத்தில் சுபாஷ் சந்திர போஸை வைத்து அரசுகளும், பொதுமக்களும் நினைவுகூர்ந்ததை பார்க்க முடிந்தது.

  நேதாஜி மரணத்தில் மர்மம்

  நேதாஜி மரணத்தில் மர்மம்

  அனால், சுபாஷ் சந்திர போஸ் காணாமல்போய் 77 ஆண்டுகள் கடந்த பிறகும் அவர் குறித்த மர்மம் விலகாமல் தொடர்கிறது. இதுகுறித்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரனும் வரலாற்று ஆய்வாளரும், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான சுகதா போஸ் விளக்கம் அளித்து இருக்கிறார்.

  நேதாஜி வரலாற்று புத்தகம்

  நேதாஜி வரலாற்று புத்தகம்

  அதில், “சந்தர்ப்பவாதிகள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழை பயன்படுத்தி அவரது மறைவு குறித்து பல்வேறு போலியான கட்டுக்கதைகளை சொல்லி வருகிறார்கள். அவர் விமான விபத்தில் உயிரிழந்தார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனது தாய் கிருஷ்ணா போஸ் எழுதிய “The life and struggle of Netaji Subhas Chandra Bose” என்ற புத்தகத்தில் நேதாஜியின் குழந்தை பருவம் தொடங்கி அவர் கடந்த 1945 ஆகஸ்டு 18 ஆம் தேதி வரை நடந்த நிகழ்வுகளை குறிப்பிட்டு உள்ளார்.

  நேதாஜியின் அஸ்தி

  நேதாஜியின் அஸ்தி

  நேதாஜியின் மறைவு குறித்த போலியான கட்டுக் கதைகளால் எனது தாய் எரிச்சல் அடைந்து இருக்கிறார். நேதாஜி மறைவுக்கு பிறகு அவர் குறித்து வெளியான பல மர்ம கதைகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. ஜப்பானின் ரென்கோஜி கோயிலில் இருக்கும் சுபாஷ் சந்திர போஸின் அஸ்தி இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் அந்த மாவீரனுக்கு உரிய கண்ணியத்தை வழங்கி மரியாதை செலுத்த வேண்டும்.

  உதவியாளர் ஹசன்

  உதவியாளர் ஹசன்

  கிருஷ்ணா போஸ் எழுதிய புத்தகத்தில் ஐ.என்.ஏவில் சுபாஷ் சந்திர போஸின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த ஹசன், சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் உயிரிழந்தது குறித்து விவரித்துள்ளார். பாங்காகில் இருந்து வியட்நாமின் சைகான் நகருக்கு நேதாஜி சென்ற கடைசி பயணம் குறித்து ஹசன் விரிவாக விளக்கியும் இருக்கிறார்.

  விமான விபத்து

  விமான விபத்து

  சைகோனிலிருந்து தைபேவுக்கு தனது முதன்மை பணியாளர் ஹபீபுர் ரஹ்மானுடன் நேதாஜி விமானத்தில் சென்று இருக்கிறார். அதன் பின்னர் தைபேவிலிருந்து புறப்பட்ட விமானம் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி நடுவானில் விபத்துக்குள்ளானதாக ஹசன் கூறியுள்ளார். இந்த விபத்தில் நேதாஜியின் உடல் மோசமாக தீயில் எரிந்ததாகவும், உயிருக்கு போராடிய அவர் அருகில் இருந்த ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் ஹசன் கூறினார்.” என்றார்.

  Source Link

  Leave a Comment

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.