LSD: ரத்தத்தை உறிஞ்சும் 'லம்பி வைரஸ்'.. 7,300 மாடுகள் மரணம்.. விவசாயிகள் உஷார்!

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாடுகளுக்கு தோல்கட்டி நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தற்போது வரை 7,300 மாடுகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தோல்கட்டி நோய் வேகமாக பரவி வருகிறது.

இந்த நோய் தாக்குதலால் மாட்டின் தோலில் கட்டி உருவாகி மாடுகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.நோயைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதோடு, நோய் பாதிப்புக்குளான 8 மாநிலங்களில் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் போலவே குஜராத் மாநிலத்திலும் லம்பி ஸ்கின் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு இந்த நோய் தாக்குதலுக்கான 22 மாவட்டங்களில் இதுவரை 1,679 மாடுகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கட்ச் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாஜக அரசு பீதியடைந்துள்ளது..! – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காட்டம்..!!

நோய் அறிகுறிகள் மற்றும் பாதிப்பு

*மாட்டின் தோல் பகுதியில் 5 செ.மீ விட்டம் கொண்ட கட்டிபோன்ற அமைப்பு உருவாகும்

*பசியின்மை, சோர்வு, அதிகமான உமிழ்நீர் சுரத்தல்

* 4 முதல் 14 நாட்கள் இந்த நோய் பாதிப்பு இருக்கும்

* தோல்கட்டி நோய் பாதிப்பால் பால் உற்பத்தி குறையும்

*தோல் பகுதியில் ஏற்படும் கட்டியால் ரத்தம் உறிஞ்சப்படுகிறது

தோல்கட்டி நோய் தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள மத்திய கால்நடைத்துறை அதிகாரிகள்,

“இந்த வகைநோயால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மத்திய குழுக்கள் குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக பிற கால்நடைகளுக்கு செலுத்த 17.92 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளது.

மாநில அரசுகள் மூலம் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்ணை விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் தொடர்பு கொண்டால் மருத்துவ குழுவினர் உடனடியாக நேரில் சென்று தடுப்பூசி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.

விற்றுத்தீர்ந்த தரிசன டிக்கெட்டுகள்..!- திருப்பதி கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு..!!

பால் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவில் இந்த பிரச்சனை காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.