ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் எல்லைக்கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர்.ஜம்மு – காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் நேற்று முன்தினம் நள்ளிரவு, எல்லைக் கோடு வழியாக இரண்டு பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இவர்கள் அருகிலுள்ள புகார்னி கிராமத்துக்கு ஊடுருவ முயன்ற போது கண்ணி வெடியில் சிக்கி உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவில் பணியாற்றும் லஷ்கர் – இ – தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, பாக்.,கில் இருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி அதிகரித்துள்ளது.
ஆயுதங்கள் சிக்கின
பஞ்சாபின், பெரோஸ்பூர் செக்டாரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று அதிகாலையில் ரோந்து சென்றபோது, எல்லை அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆயுத குவியலை கைப்பற்றினர். ‘அதில் மூன்று ஏ.கே., ரக துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், இரண்டு சப் — மிஷின் துப்பாக்கிகள் மற்றும் அதற்கான குண்டுகள், இரண்டு கைத்துப்பாக்கிகள் இருந்தன’ என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement