நான் இருக்கேண்டா உனக்கு.. சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிகி விஜய்!

சென்னை :இன்றைய தினம் சாந்தனு பாக்கியராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது மனைவி கிகி விஜய் சிறப்பான வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

சாந்தனு மற்றும் கிகி இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். நடிகர் விஜய் தலைமையில் கடந்த 2015ல் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 7 ஆண்டுகளை கடந்தும் தங்களை காதலர்களாகவே இவர்கள் இருவரும் ரசிகர்களை உணர வைத்து வருகின்றனர்.

நடிகர் சாந்தனு

நடிகர் சாந்தனு குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளவர். தொடர்ந்து சக்கரைக்கட்டி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தார். முதல் படத்திலேயே காமெடி, நடனம், சென்டிமெண்ட் என்று பலதரப்பிலான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அடுத்தடுத்தப் படங்கள்

அடுத்தடுத்தப் படங்கள்

தொடர்ந்து கோலிவுட்டில் இவர் ஒரு வலம் வருவார் என்றே இவரது அறிமுகப்படத்தில் ரசிகர்களை நினைக்க வைத்தார். ஆனால் ஆயிரம் விளக்கு, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், பாவக்கதைகள் என சில படங்களில் நடித்த இவர் தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தும் சிறப்பான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார்

 மாஸ்டர் படத்தில் சாந்தனு

மாஸ்டர் படத்தில் சாந்தனு

சமீபத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் பார்கவ் என்ற கேக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த கேரக்டர் சிறிதாக இருந்தாலும் கவனத்தை பெற்றது. தொடர்ந்து முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

விஜய் தலைமையில் திருமணம்

விஜய் தலைமையில் திருமணம்

கடந்த 2015ல் கிகியுடன் சாந்தனுவுக்கு விஜய் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையிலும் சிறப்பான புரிதலுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரையும் யூடியூபிலும் இணக்கமாக பார்க்க முடிந்தது. தொடர்ந்து இருவரும் இணைந்து நடனப்பள்ளியையும் நடத்தி வருகின்றனர்.

சாந்தனு பிறந்தநாள்

சாந்தனு பிறந்தநாள்

இந்நிலையில் இன்றைய தினம் சாந்தனு பாக்கியராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதையொட்டி கிகி விஜய் தனது வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். இவர்கள் இருவரும் இருக்கும்படியான சிறப்பான புகைப்படங்களையும் கிகி பகிர்ந்துள்ளார்.

நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்

அந்த பகிர்வில் என்னுடைய பிரெண்ட், ஸ்ட்ரெங்க்த், கடவுள் என்றுமே நீ ஆசைப்படுவதை உனக்கு வழங்கட்டும். நான் உனக்கு பின்னால் எப்போதுமே உற்சாகப்படுத்த இருப்பேன் என்பதை மறக்காதே, இருவரும் ஒன்றாக வலிமையாக வளர்வோம், ஹாப்பி பர்த்டே மா சாந்தனு என்று அழகாக பதிவிட்டுள்ளார் கிகி.

சிறப்பான உறுதுணை

சிறப்பான உறுதுணை

இந்த பகிர்வு மிகவும் சிறப்பாகவும் இவர்களது அன்னியோன்னியத்தை மீண்டும் குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த பதிவிற்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சாந்தனு, சிறப்பான தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து கோலிவுட்டில் தன்னை நிரூபிக்க போராடி வரும் இவருக்கு கிகி சிறப்பான உறுதுணையாக இருந்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.