புதுச்சேரி மக்களுக்கு ஜிப்மர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பது உண்மை – முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி மாநில மக்களுக்கு ஜிப்மர் மருத்துவமனை உரிய சிகிச்சையளிக்கவில்லை என்ற புகார் உண்மை என பேரவையில் முதல்வர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் நான்காவது அமர்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் உறுப்பினர்களின் கேள்வி, பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்கள் பேச்சு மற்றும் கடந்த 22-ந்தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
image
அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மாநில மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என உறுப்பினர்கள் கூறுவது உண்மைதான் என்றும் பாகுபாடு இன்றி சிகிச்சையளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
No recent policy changes in Hindu use, circular taken out of context: JIPMER -Puducherry- The New Indian Express
“பிரதமரின் ஆயுஸ்மான் மருத்துவத் திட்டத்தை ஜிப்மர் மருத்துவமனை ஏற்றுக்கொள்வதில்லை. இது ஒரு ஏமாற்று திட்டம்” என திமுக உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு இது குறித்து விசாரிக்கப்படும் என உறுதியளித்த முதல்வர் ரங்கசாமி ஆயுஸ்மான் திட்டம் ஏமாற்று திட்டம் என திமுக உறுப்பினர்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
image
தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நகரப்பகுதிகளில் நிலத்தடியில் உப்பு நீர் உட்புகுந்துள்ளதால் நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் நெட்டப்பாக்கம் கிராமத்தில் இருந்தும், உசுட்டேரியில் இருந்தும் குடிநீரை நகரப்பகுதிகளுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டு எழுவதால் பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் அதிகாரிகள் பணியிடை மாற்றம் மற்றும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பேரவையில் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்தார்.

image
இதனைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை மற்றும் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் மத்திய அரசு திட்டத்தின் மூலம் ரூ.350 கோடி செலவில் மின்துறையில் உள்ள பழுதான பொருட்கள் சரி செய்யப்படும் என்றும் நகரப்பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் LED விளக்குகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் பதிலளித்தார்.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/bTwRz21hUNE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.