சென்னை:
மிஷ்கின்
இயக்கத்தில்
ஆண்ட்ரியா
நடித்து
வரும்
‘பிசாசு
2′
திரைப்படம்
விரைவில்
வெளியாகிறது.
ஆண்ட்ரியாவுடன்
விஜய்
சேதுபதி,
பூர்னா,
சந்தோஷ்
பிரதாப்
ஆகியோரும்
இப்படத்தில்
நடித்துள்ளனர்.
ஆண்ட்ரியா
நிர்வாணமாக
நடித்துள்ளதாக
கூறப்பட்ட
பிசாசு
2
படம்
குறித்து
சூப்பர்
அப்டேட்
வெளியாகியுள்ளது.
ஹாரர்
திரில்லரில்
மிஷ்கின்
இயக்குநர்
மிஷ்கினின்
திரைப்படங்களுக்கு
ரசிகர்களிடம்
நல்ல
வரவேற்பு
கிடைத்து
வருகிறது.
சித்திரம்
பேசுதடி,
அஞ்சாதே,
நந்தலாலா,
பிசாசு,
துப்பறிவாளன்,
சைக்கோ
ஆகிய
படங்கள்,
விமர்சன
ரீதியாகவும்
பாராட்டைப்
பெற்றன.
மிஷ்கினின்
ஃபேவரைட்டாக
ஹாரர்
திரில்லர்
படங்களைக்
கூறலாம்.
அந்த
வகையில்
பிசாசு
படத்தின்
இரண்டாம்
பாகத்தை
மிஷ்கின்
இயக்கி
வருகிறார்.

மிரட்டிய
பிசாசு
2
டீசர்
ஆண்ட்ரியா
முதன்மை
பாத்திரத்தில்
நடிக்கும்
பிசாசு
2
படத்தில்,
விஜய்
சேதுபதி,
பூர்ணா,
சந்தோஷ்
பிரதாப்
ஆகியோரும்
நடித்து
வருகின்றனர்.
இதில்
விஜய்
சேதுபதிக்கு
கேமியோ
ரோல்
எனக்
கூறப்படுகிறது.
கார்த்திக்
ராஜா
இசையமைத்து
வரும்
இப்படத்தில்
இருந்து
‘உச்சந்தலை
ரேகையிலே’
என்ற
முதல்
பாடல்
வெளியாகி
கவனத்தை
ஈர்த்தது.
அதேபோல்
மிரட்டலான
டீசரும்
வெளியாகி
திகில்
கிளப்பியது.

நிர்வாணமாக
நடித்த
ஆண்ட்ரியா?
‘பிசாசு
2′
படத்தின்
கதை
முழுவதும்
ஆண்ட்ரியாவை
சுற்றியே
நடப்பதாக
சொல்லப்படுகிறது.
நடிப்புக்கு
முக்கியத்துவம்
உள்ள
அவர்,
நிர்வாண
காட்சியில்
நடித்தும்
பரபரப்பை
ஏற்படுத்தினார்.
“எனக்கு
நிர்வாணமாக
நடிக்க
விருப்பம்
இல்லை,
ஆனால்
கட்டாயப்படுத்தி
தான்
நடிக்க
வைத்தார்கள்”
என
அவர்
கூறியிருந்தது
ரசிகர்களை
அதிர்ச்சியடைய
வைத்திருந்தது.
அதன்பின்னர்
அந்த
காட்சியை
நீக்கிவிட்டதாக
இயக்குநர்
மிஷ்கின்
தெரிவித்திருந்தார்.
ஆனாலும்
படம்
வெளிவரும்
முன்னர்
எந்த
மாற்றமும்
நிகழலாம்
என
ரசிகர்கள்
காத்திருக்கின்றனர்.

,மெழுகு
சிலையாட்டம்
ஆண்ட்ரியா
இந்நிலையில்,
‘பிசாசு
2′
படத்தில்
இருந்து
தரமான
அப்டேட்
இப்போது
வெளியாகியுள்ளது.
அதன்படி,
‘பிசாசு
2′
படத்தின்
இரண்டாவது
பாடல்
நளை
(ஆக
25)
மாலை
5
மணிக்கு
வெளியாகும்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
கபிலன்
வரிகளில்
நெஞ்சைக்
கேளு
எனத்
தொடங்கும்
இப்பாடலை,
சூப்பர்
சிங்கர்
புகர்
பிரியங்கா
பாடியுள்ளார்,
கார்த்திக்
ராஜா
இசையமைத்துள்ளார்.
ஆண்ட்ரியா
மெழுகு
சிலைபோல்
உள்ள
போஸ்டருடன்
வெளியான
இந்த
அறிவிப்பு,
ரசிகர்களிடம்
வரவேற்பைப்
பெற்றுள்ளது.