கடந்த சில மாதங்களில், நீங்கள் எத்தனை முறை காசோலைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள் அல்லது பெற்றுள்ளீர்கள்? அல்லது எத்தனை NEFT அல்லது RTGS பரிவர்த்தனைகளைச் செய்துள்ளீர்கள்?
எப்படிப் பார்த்தாலும் உங்கள் UPI பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைந்த அளவாக இருக்கும் என்பதில் உறுதி.
அந்த அளவிற்கு இந்தியாவில் யூபிஐ சேவை இந்திய மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது. இதேவேளையில் தற்போது யூபிஐ சேவை உலக நாடுகளுக்கும் செல்ல உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.. அப்படி எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறது தெரியுமா..?
3 மாதத்தில் 16% வரை லாபம் கிடைக்கலாம் .. இந்த மினி ரத்னா பங்கு உங்ககிட்ட இருக்கா?

இந்திய பேமெண்ட் சந்தை
2016 வரை இந்திய மக்கள் காசோலைகள், DD, NEFT, RTGS அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தித் தான் பணம் செலுத்தியிருந்தனர். அது மட்டுமல்ல, உள்ளூர் கடைகள் பணத்தைத் தவிர இந்தக் கட்டண முறைகள் எதையும் ஏற்க முடியாத நிலை தான் இருந்தது. காரணம் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் அதிகச் செலவுகளை ஏற்படுத்தும்.

ரிசர்வ் வங்கி – NPCI
ஆனால் 2016க்கு பின்பு ரிசர்வ் வங்கி கீழ் இயங்கும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் அல்லது யுபிஐ என்ற உடனடி பேமெண்ட் முறையைக் கொண்டு வந்தது.

பணம் செலுத்தும் முறை
அப்போதியிருந்து, பணம் செலுத்தும் முறை மாறிவிட்டது என்றால் மிகையில்லை. இப்போது, ஒரு கிளிக்கில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு உடனடியாகப் பணத்தை மாற்றும் வசதிகள் அனைத்து தரப்பும் மக்களின் கைகளிலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் வாயிலாக உள்ளது.

மகத்தான வெற்றி
இந்தியாவில் இத்தகைய மகத்தான வெற்றியைப் பெற்ற பிறகு, NPCI இன் சர்வதேச வர்த்தகப் பிரிவான NPIL உருவாக்கப்பட்டுத் தற்போது, இந்தியாவின் UPI சேவையைப் பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்த ஒப்பந்தம் செய்துள்ளது NPIL. அப்படி எந்தெந்த நாடுகளுக்குச் செல்கிறது தெரியுமா..?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான மஷ்ரெக் வங்கி-யின் பேமெண்ட் வணிகத்துடன் ஏப்ரல் 2022 இல் NPIL கூட்டு சேர்ந்து நியோபே சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியானது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக BHIM UPI ஐ பயன்படுத்திப் பணம் செலுத்த அதிகாரம் அளிக்கிறது.

பூட்டான்
ஜூலை 2022 இல், பூட்டானின் ராயல் மானிட்டரி அத்தாரிட்டி (RMA) உடன் இணைந்து, BHIM UPI செயலியை அறிமுகப்படுத்தியதோடு அதன் QR குறியீட்டிற்கான UPI தரநிலைகளை வழங்கி உதவி செய்தது.

சிங்கப்பூர்
இந்தியாவின் UPI விரைவில் சிங்கப்பூரின் PayNow உடன் இணைக்கப்படும். இந்தச் சேவை மூலம் உடனடியாகவும், குறைந்த செலவிலும், வசதியாக எல்லை தாண்டிய நிதி பரிமாற்றங்களைச் செய்ய உதவுகிறது.

பிரான்ஸ்
NPCI இன்டர்நேஷனல் UPIஐ ஏற்றுக்கொள்வதற்குப் பிரான்சின் லைரா நெட்வொர்க்குடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் (MoU) செய்துள்ளது.
India’s UPI is ruling the world; NPCI’s UPI might be next visa or mastercard
India’s UPI is ruling the world; NPCI’s UPI might be next visa or mastercard உலகை ஆளப்போகும் இந்தியாவின் UPI சேவை.. அடுத்த வீசா, மாஸ்டர்கார்டு இதுதானா..?