‘கோப்ரா’-வில் உங்கள் நடிப்பை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது – பதானை பாராட்டிய சின்னதல!

விக்ரமின் ‘கோப்ரா’ ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றுவரும்நிலையில், படக்குழுவினருக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்துகள் தெரித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து எழுத்து இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் ஆப்ரஹாம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். துருக்கியைச் சேர்ந்த இண்டர்போல் ஏஜெண்டாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் நடித்துள்ளார். இவர்களுடன், ரோஷன் மாத்யூ, மிருணாளினி, மியா ஜார்ஜ், பத்ம ப்ரியா, கனிகா, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், ஆனந்த் ராஜ், ஜான் விஜய், ஷாஜி சென் ஆகியோர் நடித்துள்ளனர்.

image

வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானநிலையில், இந்திய கிரிக்கெட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சகோதரர் இர்பான் பதான், கோப்ரா படத்தில் உங்கள் நடிப்பைப் பார்த்து, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க ஆக்ஷன் நிரம்பிய படம் போல் தெரிகிறது. உங்களுடன் சேர்த்து அனைத்து நடிகர்களுக்கும் பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள். இந்தப் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.