தாம்பத்யம்: குளிச்சு ரெடியானா மட்டும் போதாது; இதெல்லாம் ரொம்ப முக்கியம்! #VisualStory

தம்பதிக்கு நடுவே காமம் சலிப்புத் தட்டாமல் இருக்கும் வரை, வாழ்வு திருவிழாதான்.

அதற்கு, `இன்னிக்குதான் மொத தடவை’ என்பது போன்ற எண்ணம், மனநிலை, ஒவ்வொரு முறையும் வேண்டும். `மாசத்துக்கு ஒரு தடவையாவது’, `வாரக் கடைசியிலயாவது’ என டார்கெட் வைத்து ஈடுபடுவதில்லை காமம்.

காமம் என்பது கண்ணாடி வளையல்களில், பட்டுநூல் சுத்துவது போல. பலமுறை அதை அனுபவித்திருந்தாலும், ஒவ்வொரு முறையும் ரசனையோட அந்தப் பட்டுநூலை சுற்ற வேண்டும். அதனால், ஒவ்வொரு முறையும் முதல் தடவை போன்ற சந்தோஷமும், திருவிழா மகிழ்ச்சியும் கிடைக்கும்.

முத்தமோ, அணைப்போ, முன் விளையாட்டுகளோ, சூழலோ, சிணுங்கலோ, சிரிப்போ அல்லது தலைக்கோதலோ… உங்கள் துணைக்கு எது பிடிக்கிறதோ, அதிலிருந்து ஆரம்பியுங்கள்.

சிலருக்கு உறவுக்கு முன் பேசப் பிடிக்கும்; சிலக்கு படம் பார்ப்பது பிடிக்கும். அது குலுங்க குலுங்கச் சிரிக்க வைக்கிற படமா அல்லது போர்ன் மூவியா என்பதை, சம்பந்தப்பட்ட தம்பதிதான் முடிவெடுக்க வேண்டும்.

இங்கு பலரும், தாம்பத்யத்துக்குத் தயாராக குளித்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், உடம்பும் மனசும் சேர்ந்து தயாராக வேண்டிய உயிரின் விழா அது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.